வரலாற்றில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் 23-8-2017

Last Modified : 23 Aug, 2017 11:11 am

* 1821ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி மெக்சிகோ ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது. * ஜப்பானிய மொழியையும் தமிழ்மொழியையும் ஆராய்ந்து அவற்றுக்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்த சுசுமு ஓனோ 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி டோக்கியோவில் பிறந்தார். * 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஏ.கே.செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட்டன. * 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி உலக தேவாலயங்களின் தலைமை கழகம்(World Council of Churches) ஏற்படுத்தப்பட்டது. WCC என்பது உலகில் உள்ள அனைத்து பிரிவு கிறிஸ்துவர்களுக்கும் (கிழக்கு மரபுவழி திருச்சபை,பழைய கத்தோலிக்க திருச்சபை, ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள்,புராட்டஸ்டன்ட் தேவாலயங்கள்) உள்ள ஒற்றுமை, பொதுவான சாட்சி, கிறிஸ்தவ சேவை ஆகியவற்றைத் தேடும் தேவாலயங்களின் உலகளாவிய கூட்டமைப்பு. * 1914 - முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஜெர்மனியுடன் போரை அறிவித்த நாள் ஆகஸ்ட் 23. * 1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி இன்சாட் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close