டி.எஸ்.பாலையாவை பற்றிய சிறு தொகுப்பு

Last Modified : 23 Aug, 2017 11:51 am
* தமிழ்த் திரையுலகின் ஒரு பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். * இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். 1936ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி இவரது முதல் படமாகும். * இவர் துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்திருந்தார். பிற்காலங்களில் இவர் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, போன்ற படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன. * 1946–ம் ஆண்டு, பாலையாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வருடமாகும். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘‘சித்ரா’’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக நடித்தவர் கே. எல். வி. வசந்தா. இந்தப்படத்திற்கு பிறகு பாலையா நடித்த படம் ‘வால்மீகி’. * பாலையாவுக்கு நல்ல குரல் வளம் உண்டு. ஆரம்பக்காலத்தில், பல படங்களில் அவர் சொந்தக்குரலில் பாடியுள்ளார். ‘‘பிரசன்னா’’ விலும் ஒரு மலையாளப்பாடலை சொந்தக் குரலில் பாடினார். * கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா 1972ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி தன்னுடைய 57-வது வயதில் மறைந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close