உங்களுக்கு தெரியுமா ? விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது என்று ?

Last Modified : 01 Jan, 1970 05:30 am
விமானத்தில் பறக்க யாருக்கு தான் பிடிக்காது.சிறு வயதில் இருந்தே வானில் பறக்கும் விமானத்தை அன்னாந்து பார்த்து வியக்கும் நாம், என்றாவது அது ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என யோசித்து இருக்கிறோமா ? அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 1. வெள்ளையை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களும் அதிக வெயில் மற்றும் புற ஊதா கதிர்வவீச்சால் சீக்கிரம் மங்கிவிடும். 2. மற்ற நிறங்கள் சீக்கிரமாக வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டதால் அதிகம் சூடாகும் வாய்ப்புகள் உள்ளன. 3. விமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பு அதிகம் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது. 4. பெரும்பாலான விமானங்கள், விமான கம்பெனிகளால் சொந்தமாக வாங்கப்படுவது இல்லை. விமான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு தான் வாங்குகின்றனர். வெள்ளை நிறம் பயன்படுத்துவதால், லோகோவை மற்றும் மாற்றினால் போதுமானது என்கின்றனர் சிலர். 5. விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும். இதுபோல பல காரணங்கள் விமானம் வெள்ளை நிறத்திலேயே இயக்கப்படுவதற்கு கூறப்படுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close