வரலாற்றில் ஆகஸ்ட் 27ம் நாள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
1859 - பென்சில்வேனியாவின் "டிட்டுஸ்வில்" என்ற இடத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும். 1881 - புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர். 1883 – இந்தோனீசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர். 1939 - உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது. 1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது. 1962 - நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது. 1979 - அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐஆர்ஏயின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர். 1985 - நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது. 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து மால்டோவா பிரிந்தது. 2003 - செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக 55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது. 2006 - பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் நவாப் அக்பர் பக்டி இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இன்று பிறந்தநாள்: 1876 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (இ. 1954) 1908 - தண்டபாணி தேசிகர், கருநாடக இசைப் பாடகர் 1942 - வலேரி பொல்யாக்கொவ், உருசிய விண்வெளி வீரர் 1972 - தி க்ரேட் காளீ, இந்திய தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close