இறப்பை 95% துல்லியமாக தீர்மானிக்கும் கூகுள்!!

  சுஜாதா   | Last Modified : 23 Jun, 2018 08:10 am
google-can-predict-when-you-will-die

மனிதனின் இறப்பைக் கணிக்கும்  செயற்கை நுண்ணறிவு முறையை கூகிள் நிறுவனம் உருவாக்கி உள்ளது. 

மருத்துவரை விட துல்லியமாக செயற்கை நுண்ணறிவு நோயாளியின் இறப்பை கணித்திருப்பதாக கூகிள் நிறுவனம் ஆங்கில நாளிதழ் ஒன்றில் தெரிவித்துள்ளது. அதில்,  ஒரு பெண் மார்பகப் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் 9.3% மட்டுமே இறப்பதற்கு வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பின்னர் அந்தப் பெண்ணின் உடல்நிலை பற்றி கூகுளின் செயற்கை நுண்ணறிவு 1,75,639 மருத்துவத் தரவுகளை கொண்டு ஆராய்ந்து அந்தப் பெண் 19.9% இறப்பதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியது. அதேபோல் அந்தப் பெண் ஒரு சில நாள்களுக்குள் இறந்துவிட்டார். இதன்மூலம் இந்த செயற்கை நுண்ணறிவு 95% வரை துல்லியமாக கணித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.  மேலும், கூகுளின் இந்த செயற்கை நுண்ணறிவு வருங்காலத்தில் மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

கூகுளின் இந்த செயற்கை நுண்ணறிவு செயல்முறை மருத்துவனையில் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அவர் உயிர் பிழைப்பரா என்பதை 95% துல்லியமாகக் கணித்துவிடும். 

இதற்கான கருவியை தற்போது கூகுள் சோதித்து வருகிறது. எதிர்காலத்தில் இது மிகச்சரியாக கணிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்றும் கூகுள் நிறுவனம் கூறுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close