இமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி?

  சிவசங்கரி கோமதி நாயகம்   | Last Modified : 17 Jul, 2018 02:31 pm
do-emojis-help-us-to-better-communicate-emotions

இந்த நிமிடத்தில் உங்களது எமோஷன் எப்படி இருக்கிறது?

மகிழ்ச்சி? கவலை? அல்லது இரண்டும் கலந்ததா? 

எது என சட்டென யூகிக்க முடியவில்லையா? அப்போது, இன்றைய நாளுக்கான உங்களது எமோஷனை மேலே படத்திலுள்ள இமோஜியிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடிகிறதா என்று பாருங்கள்.

இது கொஞ்சம் சுலபமான தீர்வாகவே இருந்திருக்கும். ஆம், சில வார்த்தைகளை இமோஜிக்கள் விழுங்கிவிட்டன. இன்றைய அவசர உலகத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே கூட சிரிப்பு, துக்கம், கைகுலுக்கல்கள், பாராட்டுக்கள் என்று எல்லாமும் மென்மையாக சத்தமில்லாமல் இமோஜிக்களாகவே அரங்கேறுகிறது வாட்ஸப்பில். 

ஆய்வின் கூற்றுப்படி, சமூக வலைதளங்களில் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 6 பில்லியன் இமோஜிக்கள் உலகெங்கிலும் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. 

ஜப்பானிய மொழியிலிருந்து வந்த வார்த்தை இமோஜி. இ என்றால் வரைபடம் என்றும், மோஜி என்றால் கேரக்டர் என்றும் அர்த்தமாகும். 

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாட்ஸப்பில் இப்போது வரும் செய்திகள் இமோஜிக்கள் இல்லாமல் வருவதில்லை. முகத்திற்கு நேர் நடக்கும் உரையாடலில் ஒருவரின் கையசைவுகளும் பாடி லாங்குவேஜும் அவரின் குரல் தொணியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை அனைத்தும் பேசுபவரின் எண்ண ஓட்டத்தை அறிய மிகவும் உதவும். ஆனால், ஆன்லைன் உரையாடல்களில் ஒருவரின் எண்ண அலைகளை கணிப்பது சிரமம். சில நேரங்களில் ஒருவர் சொல்லும் விஷயம் முற்றிலும் தவறுதலாக புரியக் கூடிய சூழ்நிலைகளும் உள்ளது. 

இதுபோன்ற சிக்கல்களை ஆன்லைன் உரையாடல்களில் தவிர்க்க பெரிதும் உதவுவது இந்த இமோஜிக்கள். ஒரு செய்தியின் முடிவில் சேர்க்கப்படும் சரியான இமோஜி அந்தச் செய்தியின் பொருளையும் அதற்கு நாம் அளிக்க இருக்கும் விளக்கத்தையும் நிர்ணயிக்கும் திறம் கொண்டது. நேரில் நாம் ஒரு சிரித்த முகத்தைப் பார்க்கும்போது நமது மூளைக்குள் சில பகுதிகள் புத்துணர்ச்சி பெற்று நம்மையும் சிரிக்க செய்யும். அதேபோல் சிரிக்கும் இமோஜிக்களும் நம் மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

வேலை சம்பந்தப்பட்ட இமெயில்களில் இதுபோன்ற இமோஜிக்களைப் பயன்படுத்தினால் என்ன பலன் உள்ளது என்று 2013 ஆம் ஆண்டு 150 பணியாளர்களுக்கு கொண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 

"உங்களைக் குறித்த நேரத்தில் சந்திக்க இயலவில்லை" என்ற செய்தி இரு விதமாக பணியாளர்களுக்கு அனுப்பப்பட்டது. ஒன்று வெறும் செய்தியாகவும், மற்றொன்று செய்தியுடன், சிரிக்கும் இமோஜியும் அனுப்பப்பட்டது. ஆய்வின் இறுதியில் கண்டறியப்பட்ட உண்மை - வேலை சம்பந்தப்பட்ட இமெயில்களில் இமோஜிக்கள் உபயோகப்படுத்தப்படும்போது பணியாட்களிடையே எதிர்மறை எண்ணங்கள் சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கடுமையான செய்தி பாசிட்டிவ் இமோஜியுடன் சேரும்போது பெரிய எதிர்மறை சிந்தனைகளை தூண்டுவதில்லை. 

மேலும், ஆன்லைன் பேச்சுவழக்கில் இமோஜிக்களை உபயோகப்படுத்துவது ஒரு நெருங்கிய தோழமை உறவையும், முற்போக்கு சிந்தனை உணர்வையும் ஏற்படுத்துகிறது. இந்த இமோஜிக்கு ஆரம்பமாக விளங்கியது ":-)" என்ற குறியீடுதான். பின்னர் மக்கள் lol, ROFL, omg என்று வார்த்தைகளை சுருக்கி பேச ஆரம்பித்தார்கள். இவ்வாறு சுருக்கி வரையப்பட்ட இந்த வார்த்தைகள் இப்போது இமோஜிக்களாக வெளிவந்தது. 

முதன்முதலாக இன்ஸ்டாகிராம் ஆப் இமோஜிக்களை ஹேஷ்டேக் மூலம் உபயோகம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் எந்தெந்த இமோஜிக்களை எந்தெந்த தருணங்களில் உபயோகப்படுத்துகிறார்கள் என்று கணக்கிட முடியும். 

1. சிரித்து சிரித்து ஆனந்த கண்ணீர் வருவதை போல உள்ள இமோஜியில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஒன்றாகும்.

2. இரண்டு ஹார்ட் போன்ற கண்களைக் கொண்ட, அழகு என்பதை உணர்த்தும் இமோஜி இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. 
 
3. ஹார்ட் இமோஜி மூன்றாவதாக பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. 

4. தம்ப்ஸ் அப் இமோஜி ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.

5. அழுகை முகம் கொண்ட இமோஜி 11 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
 
இமோஜிக்கள் ஆயிரக்கணக்கில் பெருகி விட்டதால் நாம் அதனை உபயோகிக்கும் முன்னர் எந்த இமோஜிக்கள் எதனை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

ஒரு காலகட்டத்தில் உணர்ச்சிகளின் பிம்பமாக விளங்கிய மனிதன் இப்போது தனது உண்மையான உணர்ச்சிகளை பகிர ஆள் கிடைக்காமல் ஏங்குகிறான். முகம் பார்த்து பேசுதல், என் கையை பிடித்துக் கொள், நான் அழுது தீர்க்கிறேன் போன்ற செயல்கள், என் அருகில் அமர்ந்து என் மௌனத்தை கேள் போன்ற நிகழ்வுகள் எல்லாம் இந்த அவசர உலகத்தில் மலையேறிப் போய்விட்டது. பரபரப்பான வாழ்க்கை முறையும் மக்களின் பொறுமையின்மையும் மனித உணர்வுகளை செல்லாக் காசாக நினைக்க வைத்துவிட்டது.  
அப்படியிருக்க, அறிவியல் உலகம் நாம் இழந்து நிற்கின்ற எமோஷனல் வாழ்க்கை முறையை ஞாபகப்படுத்துவதற்கே இது போன்ற இமோஜிக்களை உருவாக்கி உள்ளனர். உறவுகளுக்கு நடுவே இருக்கும் உணர்வுகளை சொல்ல முடியாமல் தவிக்கும் நாம், இந்த  இமோஜிக்கள் மூலமாவது நல்ல உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோமாக. 

உலக இமோஜி தினமான இன்று (ஜூலை 17) உங்கள் இமோஜி என்ன என்று முடிவு செய்து விட்டீர்களா? 

உங்கள் எண்ணங்களை இமோஜிக்களாக கமெண்ட்களில் பகிர்ந்து சந்தோஷங்களை பரப்புங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close