தம் உயிரை பணயம் வைத்து போட்டிகளில் பங்குபெறும் WWE விளையாட்டு வீரர்களின் பின்னுள்ள சோகம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படும் WWE நட்சத்திரங்களுக்கு அடிப்படை தொழிலாளர் உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. இது குறித்து முன்னாள் வீரர் ஜிம்மி ஸ்நூகா தொடர்ந்துள்ள வழக்கில், தான் இப்போட்டிகளில் பங்கேற்றதால் உடலளவிலும் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப் பட்டதாகவும் இனியாவது தன்னை போன்றவர்களின் பாதுகாப்பை இச்சம்மேளனம் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.