சிறுநீரில் இருந்து மதுபானம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ள பெல்ஜிய விஞ்ஞானிகள் குழு, அதற்கு 'சாக்கடையில் இருந்து மது' என பெயர் சூட்டியுள்ளனர். சோலார் எனர்ஜியை பயன்படுத்தி, சிறுநீரில் இருக்கும் அமோனியாவை பிரித்தெடுத்தால், அது குடிப்பதற்கு ஏதுவான சுத்தமான நீராக மாறிவிடும் என்றும், அதன் பின்னர் அதனைப் பயன்படுத்தி மதுபானம் தயாரிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி குடிநீர் தட்டுப்பாடுள்ள இடங்களின் குடிநீர் தேவையை தீர்த்துக் கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.