Papua New Guinea நாட்டின் வெப்பமண்டலக் காட்டுப் பகுதிகளில் Pheidole viserion மற்றும் Pheidole drogon என்னும் 2 வகை எறும்புகள் புதிதாகக் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. இவற்றின் பெரிய தலை மற்றும் முட்கள் கொண்ட உடலமைப்பு ஆகியவற்றைப் பார்ப்பதற்கு 'கேம் ஆப் த்ரோன்ஸ்' சீரியலில் வரும் டிராகன்கள் போலவே இருப்பதால் இவை இவ்வாறு பெயரிடப் பட்டுள்ளன. இவற்றின் உடலமைப்பைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் தற்போது X-ray Microtomography என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.