நியூ யார்க்கைச் சேர்ந்த உடை வடிவமைப்பாளரான Nikolas Bentel, காற்று மாசுபட்ட இடத்திற்க்குச் சென்றால், காற்று மாசுபாட்டின் அளவைப் பொருத்து நிறம் மாறும் Aerochromics என்னும் டி-ஷர்டை உருவாக்கியுள்ளார். இது, carbon monoxide, particle pollution மற்றும் radioactivity ஆகிய 3 வகை மாசுபாட்டை, கருப்பில் இருந்து வெண்மை நிறத்திற்கு மாறுவதன் மூலம் தெரியப்படுத்தும். அமெரிக்காவின் அனுமதிக்கப்பட்ட காற்று மாசுபாட்டு அளவு(AQI) 100 என்றாலும், இது 60-வதைக் கடக்கும்போதே நிறம் மாறத்துவங்கும்.