உலகத்திலேயே மிகவும் மோசமான வனவிலங்கு சரணாலயம் என்று பெயர் பெற்ற காஸாவின் Khan Younis Zoo, அரசு நிதி பற்றாக் குறையினாலும், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததாலும் மூடப்படுகிறது. இதனால் இங்குள்ள விலங்குகளை தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் வேறு நாடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருக்கும் வங்கப்புலி மட்டும் தென்னாப்ரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 15 விலங்குகள் ஜோர்டனுக்கு கொண்டு செல்லப்படும். ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த 'தி ஃபோர் பாஸ்' அமைப்பு ஒரு புலி, குரங்கு, பறவைகள், முள்ளம்பன்றிகள் ஆகியவற்றை கொண்டு செல்ல உள்ளனர்.