கொசு கடித்தால் சொறியலாமா?

  varun   | Last Modified : 31 Aug, 2016 10:03 am

கொசுவானது நம்மை கடிக்கும்போது அதன் உமிழ்நீரை நம் தோல்பகுதியில் விட்டு செல்வதால் நமக்கு அப்பகுதியில் அரிப்பு ஏற்படுகிறது. கொசுக்கடி ஏற்பட்ட பகுதியினை சொறிவதால் நமது தோலின் வீக்கம் அதிகமாவதுடன் அது நீங்காமல்போய், தோலில் நிரந்தர தழும்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் சொறிவதால் அவ்விடம் பழுப்பாகி புண்ணாவதுடன், நம் நகத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அப்புண்ணில் நுழைந்து சீழ் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே கொசுக்கடி அரிப்பினைப் போக்க கடித்த இடத்தில் எலுமிச்சை சாறைத்தடவுவதும், 'vaporub' தைலங்களை தடவுவதுமே சரியான தீர்வாம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close