பியர் க்ரில்ஸின் இன்னொரு முகம்

  varun   | Last Modified : 14 Sep, 2016 05:41 pm
அசாதாரண சாகசங்களை நிகழ்த்தி நம்மை எல்லாம் டிஸ்கவரி தொலைக்காட்சியின் முன் கட்டி போட்டவர் ' பியர் க்ரில்ஸ்'. "Man Vs Wild எனும் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற இவரின் இயற்பெயர் எட்வர்ட் மைக்கேல் க்ரில்ஸ் என்பதாகும். "பியர்" என்னும் பட்டம் அவரது அக்கா செல்லமாக அவருக்கு கொடுத்ததாம்! கராத்தேவில் 'ப்ளாக்' பெல்ட் பெற்றுள்ள பியர் ராணுவத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். ஒரு முறை ராணுவ பயிற்சி ஒன்றில் 16,000 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் அவரது 3 முதுகெலும்புகள் முறிந்து உள்ளது. தனது 23 ஆம் வயதில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டின் உச்சியை தொட்ட நம் பியர், மலை ஏறும் போது தன் கால்களை இழந்த தன் நண்பர் ஒருவருக்கு நிதி திரட்டுவதற்காக தேம்ஸ் நதியினை ஒரு குளியல் தொட்டியில் நிர்வாண நிலையில் கடந்துள்ளார். மேலும் 7,600 மீட்டர் உயரத்தில் பறந்த பலூனில் மதிய உணவு உண்டும் சாதனை படைத்துள்ளார். 2008 -ஆம் ஆண்டில் மிகவும் நீளமான தொடர்ச்சியான உள்ளரங்க ஃப்ரீஃபாலைச் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இவரின் சாகச பயணங்கள் மூலம் கிடைக்கும் பணமானது பல்வேறு கருணை அமைப்புகளுக்கு நிதியாக வழங்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close