இந்தியா: 2015-ம் ஆண்டு மட்டும் மூன்றில் ஒரு பங்கு பிரசவ மரணம்!!

  நந்தினி   | Last Modified : 23 Sep, 2016 07:36 am
உலக அளவில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரசவ மரணங்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ வார இதழான லேன்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக அளவில் நடக்கும் பிரசவங்களில் 25 சதவீத பிரசவங்கள் சரியான மருத்துவர்களின் துணையின்றியே நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2015-ல் பிரசவத்தின் போது மரணித்த தாய்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் உலக அளவில் மூன்றில் ஒருபங்கு இறப்பு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 45,000 பேர் பிரசவத்தின் போது மரணித்து உள்ளதாகவும், இந்த பட்டியலில் 58,000 இறப்புகளுடன் நைஜீரியா முதலிடம் வகிப்பதாகவும் தெரிவித்துள்ளன. ஆண்டுதோறும் உலக அளவில் 210 மில்லியன் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் நிலையில், 140 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறப்பதாகவும் லேன்செட் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close