இன்று உலக சுற்றுலா தினம்!!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலக சுற்றுலா தினம் இன்று (செப்.27) கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அரசியல், சமூகம், பொருளாதாரத்தில் சுற்றுலா எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விதத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் 27 ஆம் தேதி சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் சர்வதேச புரிந்துணர்வு, சமாதனம் ஆகியவற்றை மேம்படுத்துதலும், மனித குலம் முழுவதும் அடிப்படைச் சுதந்திரத்தை அடைவது குறித்து அறிவுகளை பெறுவதும் தான். ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் இன்றும் பல நாடுகள் சுற்றுலாவை தங்கள் கலாச்சாரத்திற்குள் வைத்துள்ளன. மனித குலத்தை மேம்படுத்தும் வகையில் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதியை உலக சுற்றுலா தினத்தை அங்கீகரித்தது ஐ.நா சபை. சுற்றுலாவில் கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, வியாபர சுற்றுலா என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. இத்துறை உலக நாடுகளின் தொழில் துறையாக இன்றளவும் இருக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலா தான். 2010 ஆம் ஆண்டு கணக்குப்படி 940 மில்லியன் சர்வதேச பயணங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதே செப்டம்பர் 27 ஆம் தேதியை சர்வதேச நீர் பகிர்வு தினமாகவும் ஐ.நா சபை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close