இன்று உலக இதய தினம்: இதய நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம் ?

  gobinath   | Last Modified : 29 Sep, 2016 07:02 am
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர் இதய நோயால் மரணமாகிறார்கள் என்றும், அதில், 75 லட்சம் பேர் மாரடைப்பாலும் 67 லட்சம் பேர் வாத நோயாலும் இறப்பதாகவும் புள்ளி விபரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதய நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் 13 சதவிகித இதய நோயால் ஏற்படும் மரணங்கள் ரத்த அழுத்தத்தாலும், 9 சதவிகிதம் புகைப்பழக்கத்தாலும், 6 சதவிகிதம் நீரிழிவு மற்றும் உடற்பயிற்சியின்மையாலும், 5 சதவிகித மரணம் அதிக உடல் எடையால் ஏற்படுவதாகவும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே இளம் வயதில் புகைப் பழக்கம், கட்டுப்பாடில்லாத மதுப் பழக்கம், முட்டை, இறைச்சி, நெய் போன்ற கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்பதே இந்நாளில் நாம் எடுக்க வேண்டிய சபதமாக இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close