மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்ற ஜப்பான் பேராசிரியர்!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
டோக்கியோ பல்கலைக்கழக செல்லியல் துறை பேராசிரியரான யோஷிநேரி, மனித உடலில் உள்ள செல்கள் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் முறை குறித்து கடந்த 2014-ல் புத்தகம் ஒன்றினை எழுதினார். அதில், ஆட்டோபேஜி முறை குறித்த விரிவான விளக்கங்கள் மற்றும் அந்த துறை ஆய்வு குறித்த வரலாற்றினையும் அவர் பதிவு செய்திருந்தார். உயிரியல் துறையில் மிகப்பெரும் கிளையாக வளர்ந்துவரும் ஆட்டோபேஜி குறித்த ஆய்வுகளை சர்வதேச அளவில் மிகச் சில விஞ்ஞானிகளே மேற்கொண்டு வரும் நிலையில், அந்த துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நோபல் பரிசு கவுரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. செல்கள் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் ஆட்டோபேஜி குறித்த ஆய்வுகள் மூலம் உடலில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான செல்களைக் கண்டறிந்து சரி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஜப்பானில் இருந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறும் 23-வது நபர் யோஷிநேரி ஓஷூமி ஆவார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close