சிலிண்டரைப் பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிகள்- பாகம் 1

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்த காலத்தில் நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். சிலிண்டரின் பாதுகாப்பு முறைகள் பற்றி தெரியாமல் நிறைய பேர் இருப்பதால், சிலிண்டரினால் ஏற்படும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவற்றைத் தவிர்க்க சிலிண்டரை பாதுகாப்பாய் பயன்படுத்தும் வழிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். அவற்றை இங்கு பார்ப்போம்: * சிலிண்டரை முதலில் வாங்கியதும், ரப்பர் டியூப் சிலிண்டர் வால்வின் உட்புறத்தில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். * சிலிண்டரை காற்றோட்டமான பகுதியில், சமமான உயரமுள்ள பகுதியின் தரையில் செங்குத்தாக வைக்க வேண்டும். * வெப்பம் மிகுந்த பொருட்கள் மற்றும் விரைவில் தீப்பற்றும் பொருட்களான எண்ணெய் போன்ற பொருட்களை சிலிண்டரின் அருகில் நிச்சயம் வைக்கக் கூடாது. * சிலிண்டரில் ஏதும் கசிவுகள் ஏற்படுவது போல தென்பட்டால், உடனே சோப்பு நீரினைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close