மார்பக புற்றுநோய் பாதித்த 28% பேர் சென்னை பெண்கள்!!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சென்னையில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாகவும், இதனால் இளம்பெண்களின் இறப்பு விகிதம் கூடிவருவதாகவும் மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை அனுசரிக்கும் வகையில், மெரினா காந்தி சிலை அருகிலிருந்து இன்று காலை மார்பகப்புற்று நோய் விழிப்புணர்வு பேரணி மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் சார்பில் நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன் கூறுகையில், "மார்பகப் புற்றுநோய் குறித்து தமிழகப் பெண்களுக்கு விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. மேலும், சென்னைப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஆண்டாண்டுக்கு அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் மார்பகப் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களில் 28 சதவீதம் பேர் சென்னையில் தான் உள்ளனர். அதேபோன்று மார்பகப் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகிய பெண்களில் 67% பேர் இறந்துவிடுகின்றனர். முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குத்தான் மார்பகப் புற்று வரும். ஆனால் தற்போது 30 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குத்தான் அதிக அளவில் இந்த மார்பகப் புற்றுநோய் வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close