இன்று சர்வதேச பெண் குழந்தை தினம்!!

  நந்தினி   | Last Modified : 11 Oct, 2016 07:55 pm
பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் ஐக்கிய நாடுகள் சபை, 2012-ல் அக்டோபர் மாதம் 11ஆம் தேதியை சர்வதேச பெண் குழந்தை தினமாக அறிவித்தது. இன்று 4-வது சர்வதேச பெண் குழந்தை தினத்தையொட்டி பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் மற்றும் குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 30% பெண்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்படுகின்றன. 18 வயதைக் கூட கடக்காத பெண்கள் ஒரு குழந்தைக்கு தாயாகி விடுகின்றனர். மேலும், பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் ஆளாகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து பெண்கள் விழித்துக்கொள்ளவும் தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து போராடவும் பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை முன்னேற்றும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close