புன்னகை செய்யும் மாயம்!

  varun   | Last Modified : 12 Oct, 2016 05:04 pm
"சிரி! நீ ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடை அடிக்கப்படுகிறது!" என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. புன்னகையை விட சிறந்த பொன்நகை கிடையாது. புன்னகை என்பது ஒரு மனிதனுடன் இணைந்திருக்கும் அழகிய உணர்வின் வெளிப்பாடு. பிறந்த குழந்தையும்கூட காரணமின்றிச் சிரிக்கிறது. மனிதர்களைப் புத்துணர்ச்சியோடு எந்நேரமும் வைத்திருக்கப் புன்னகை உதவுகிறது என அறிவியல் சொல்கிறது. நீங்கள் நடந்து வரும்போது எதிரில் பார்க்கிற ஒருவர் மெலிதாய்ப் புன்னகைக்கையில் உங்களுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியாய் இருக்குமோ அதைப் போலவேதான் உங்களைப் பார்க்கிறவர்களுக்கும் இருக்கும். உடலை நோய் நொடியின்றி வைத்துக்கொள்வதற்கு எப்போதும் மகிழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டேயிருப்பது அவசியம். எதிரிகளையும் நண்பர்களாக்கும் சக்தி உங்களது சிறு புன்னகைக்கு உண்டு. எப்படிப்பட்ட கணத்திலும் புன்னகைப்பது அப்போதிருக்கும் சூழலை உற்சாகமாக்க உதவுகிறது. ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. அந்தச் சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை. அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தைப் பார்க்கும்போது, எத்தனையோ பிரச்னைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. உங்கள் சிரிப்பு, 'பெர்சனாலிட்டி'யை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். ஆகவே, மற்றவர்களுடான உறவைக் கட்டிக்காக்க முகத்தில் எப்போதும் புன்னகையைப் படரவிட்டபடி இருங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close