93 வயதிற்கு அடியெடுத்து வைக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய்

  Sujatha   | Last Modified : 25 Dec, 2017 06:51 pm


பெயர்: அடல் பிஹாரி வாஜ்பாய் 

பிறப்பு: 25 டிசம்பர் 1924 (வயது 88)

பிறப்பிடம்: குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது)

பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில், கிருஷ்ணா தேவி - கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய் ஆகியோருக்கு 25 டிசம்பர் 1924 இல் நடுத்தர பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும்  பள்ளி ஆசிரியர் ஆவார்.

தனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், பத்திரிக்கையாளராக மாறினார். ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார். 

மொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து, அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. 

மூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.