ஏன் பிப்ரவரியில் மட்டும் 28 நாட்கள் தெரியுமா ?

  Sujatha   | Last Modified : 07 Jan, 2018 07:02 pm

காலம் பொன்னாது. காலத்தைக் கணிக்க உதவும் இன்றியமையாத ஒரு சாதனமே  "காலண்டர்"  என அழைக்கப்படும்  நாட்காட்டி!!


நாட்காட்டியானது ஆரம்பத்தில் விவசாயத்திற்கான பருவநிலை மாற்றங்களை கண்டறியவே உருவாக்கப்பட்டன. முதலாவது ரோம நாட்காட்டியில் 304 நாட்களே இருந்தன. (அதில் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இருக்கவில்லை!) 304 நாட்களைக்கொண்ட நாட்காட்டி சரியாக பருவ மாற்றங்களை தரவில்லை. ஏனெனில் பூமி சுழற்சிக்கு  365 1/4   நாட்கள் தேவைப்பட்டது.


Numa Pompilius என்ற அரசர் ஜனவரி, பிப்ரவரி என்ற இரு மாதங்களையும் இணைத்து 355 நாட்களைக்கொண்ட புதிய நாட்காட்டியை உருவாக்கினார். எனினும் அதுவும் சரியான பருவமாற்றத்தை காட்டவில்லை. காரணம், பூமி சுற்றுகைக்கு 10 நாட்கள் வித்தியாசப்பட்டன.


பின்னர் வந்த அரசர் Julius Caesar (ஜூலியஸ் சீசர்) 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட நாட்காட்டியை உருவாக்கினார். ஜூலை  தான் பிறந்த மாதமாக வருவதனால் அது மற்ற  சில மாதங்களை விட குறைவான நாட்களைக்கொண்டிருப்பதை விரும்பாத சீசர், வருடத்தின் இறுதி மாதமாக விளங்கிய பிப்ரவரியில் இருந்து 1 நாளை எடுத்து ஜூலையுடன் இணைத்துகொண்டார்!  பிப்ரவரிக்கு 29 நாள் ஆனது.


சீசருக்குப் பின் வந்த அகஸ்டஸ் (Augustus) தனது பெயரில் ஒரு மாதம் இருக்கவேண்டும் என விரும்பி, தான் பிறந்த மாதத்திற்கு ஆகஸ்ட் என பெயர் மாற்றம் செய்தார்  எனினும் ஆகஸ்டில் 30 நாட்களே இருந்தன, சீசரை விட தான் குறைந்தவன் அல்ல என காட்டுவதற்காக வருட இறுதி மாதமான பிப்ரவரியில் இருந்து மீண்டும் ஒரு நாள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 31 ஆனது, பிப்ரவரி 28 ஆக மெலிந்தது!


நாட்காட்டியின் தொடக்க மாதமாக, மார்ச் மாதம் விளங்கியது. பின்னர், காலப்போக்கில் ஜனவரி மாதத்தை முதலாவது மாதமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிப்ரவரி இரண்டாம் மாதமாகியது!இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதனால் தான் ஏழு என்ற அர்த்தம் கொண்ட செப்டம்பர், எட்டு என்ற அர்த்தம் வரும் அக்டோபர், ஒன்பது என்று அர்த்தம் வரும் நவம்பர், 10 என்று அர்த்தம் வரும் டிசம்பர் ஆகிய மாதங்கள் சம்பந்தமே இல்லாமல், முறையே ஒன்பது, 10, 11, 12வது மாதங்களாக வேறு இடங்களுக்கு மாறியுள்ளன.


நாம் இன்றைக்கு பயன்படுத்துவது கிரகோரியன் நாட்காட்டி. இது 1582ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறாக  நம் முன்னோர்கள் உருவாக்கிய காலத்தை வீணாக்காமல் நம் கடமையை செய்வோமா!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.