காந்திஜியின் செல்ல "மிக்கி மவுஸ்" - சரோஜினி நாயுடு பிறந்தநாள் ஸ்பெஷல்

  Sujatha   | Last Modified : 13 Feb, 2018 06:54 am


பிறப்பு: பிப்ரவரி 13, 1879

பிறப்பிடம்: ஹைதராபாத்

இறப்பு: மார்ச் 2, 1949

தொழில்: கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பேச்சாளர், ஆளுநர்

பிறப்பு மற்றும் கல்வி: 

இந்தியாவின் "கவிக்குயில்" என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.

இவருக்கு சிறு வயதில் இருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் அதிகம். இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம் வெளிநாடு சென்று படிக்க உதவித் தொகை வழங்கினார்.

இவர் எழுதிய படைப்புகளில்  “தி கோல்டன் த்ரேஷோல்டு (1905)”, “தி பார்ட் ஆஃப் டைம் (1912)”,  மற்றும் “தி ப்ரோகேன் விங் (1912)” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 1905-ல் வங்கப் பிரிவினையின்போது இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் இணைந்தார்.

காதல் மற்றும் இல்லற வாழ்க்கை: 

சரோஜினி நாயுடு அவர்கள், தனது பதினைந்தாவது வயதில், டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரை சந்தித்தார். அவரைக் காதலிக்கவும் தொடங்கினார். தொழில்ரீதியாக அவர் ஒரு மருத்துவராக இருந்த அவர் ஒரு அல்லாத பிராமணர். 19வது வயதில் சரோஜினி நாயுடு அவர்கள், தனது படிப்பினை முடித்த பின்னர், உள் சாதி திருமணம் அனுமதிக்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில், அவர் டாக்டர் கோவிந்தராஜுலுவைத் திருமணம் செய்து கொண்டார். அது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருந்தாலும், சரோஜினியின் தந்தை அவரது முயற்சிக்கு முழுவதுமாக ஆதரவு தெரிவித்தார். சரோஜினி நாயுடு அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மணவாழ்வு அமைந்தது. அதன் அடையாளமாக அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் ஜெயசூர்யா,  பத்மஜ், ரந்தீர், மற்றும் லீலாமணி.

இந்திய தேசிய இயக்கத்தில் சரோஜினியின் பங்கு:

பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியை முன்னெடுத்தார். 1919-ல் ஹோம் ரூல் இயக்கத் தூதராக நியமிக்கப்பட்டார் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தில் பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து முதலில் களம் இறங்கினார்.

1925-ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்த முதல் பெண் இவர் தான். காந்திஜி இவரை செல்லமாக "மிக்கி மவுஸ்" என்பார். காந்தியடிகளுடன் தண்டி யாத்திரையில் கலந்துகொண்டார்.

ஆகஸ்ட் 15,  1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், சரோஜினி நாயுடு அவர்கள், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார். இவர் ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர்’ என்ற பெருமையத் தட்டிச் சென்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.

இறப்பு:

சரோஜினி நாயுடு அவர்கள், மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.

20-ம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகளில் ஒருவராகத் திகழ்ந்த இவரது பிறந்தநாள் இந்தியாவில் தேசிய மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.