பிற்காலக் கம்பர் என்று போற்றப்பெற்ற மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி சிறு துளிகள்

  Sujatha   | Last Modified : 06 Apr, 2018 08:44 am


* மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி திருச்சியில் பிறந்தார்.

* இவர் சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து பல இலக்கியங்களைப் படைக்க தொடங்கினார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் பிள்ளைத் தமிழ் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார்.

* இவர் ஏராளமான தல புராணங்களை பாடியுள்ளார். இவரிடம் பயின்றவர்களில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர் சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள்.

* மாயூரம் வேதநாயகம் பிள்ளையை பாராட்டி குளத்துக்கோவை என்னும் நூலை இயற்றினார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு 'மகாவித்வான்' என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.

* ‘தாயைவிட என் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று உ.வே.சா. இவரைக் குறிப்பிட்டுள்ளார். இவரது படைப்புகள் பலவற்றை ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் உ.வே.சா. வெளியிட்டுள்ளார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் என்ற தலைப்பில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. எழுதினார்.

* இவரது படைப்புகள் அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் 2 லட்சம் பாடல்களை இவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது.

* இவர் பாடிய திருநாகைக் காரோணப் புராணமும், மாயூரப் புராணமும் பெருங்காப்பியங்களாகப் போற்றப்படும் சிறப்பு மிக்கன.  

* 19ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தனது 60வது வயதில் (1876) மறைந்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close