ஆரிய படையெடுப்பு கட்டுக்கதையா? புதிய ஆய்வு கூறும் தகவல்கள்

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 06:38 pm

rakhigarhi-dna-study-says-no-central-asian-trace-in-harappa-site

சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பிறகு தெற்காசியாவில் இருந்து ஆரிய படையெடுப்பு நடந்ததா? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகில் மிகவும் பழமையானது சிந்து சமவெளி நாகரிகம். கி.மு. 3000க்கும் கி.மு. 2500க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் உச்ச நிலையில் இருந்த நாகரிகம் இது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த நாகரிகம் வேகமாக அழிந்துவிட்டது. இதற்கு ஆரியர்களின் படையெடுப்பு தான் காரணம் என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.  மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியர்கள் அவர்களது நாகரிகத்தை இந்தியாவில் பரப்பியதாக கூறப்பட்டு வருகிறது. இந்த படையெடுப்பு காரணமாக  ஹாரப்பாவில் இருந்த மக்கள் தெற்கு நோக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தின் ரகிகார்ஹி பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகளை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். புனேவில் உள்ள டெக்கன் கல்லூரியின் துணை வேந்தரும் தொல்லியல் அறிஞருமான வசந்த் ஷிண்டே மற்றும் லக்னோவில் உள்ள பிர்பால் சஹ்னி பழங்கால டிஎன்ஏ அறிவியல் கூடத்தின் தலைவர் நீரஜ் ராயும் இந்த ஆராய்ச்சியை நடத்தினர். 

இதன் முடிவுகளில் நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வரும் ஆரியர்களின் வருகைக்கு எந்த ஆதாரங்களும் அந்த எலும்பு கூடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிடைக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஷிண்டே கூறும் போது, "ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தனர் என்று சொல்லப்பட்டு வருகிறது. ரக்கிகார்ஹி பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்பு கூடுகளின் டிஎன்ஏ அனைத்தும் உள்ளூர் மரபணுவுடன் ஒத்து போகின்றன. அதில், சில மரபணுக்களில் மட்டும் வித்தியாசம் தெரிகிறது. அது, வெளியில் இருந்து இங்கு வந்தவர்களின் கலப்பாக இருக்கலாம். மற்றபடி இவை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களின் மரபணுக்களுடன் ஒத்துப்போகிறது. மேலும், அவர்கள் இறுதிச்சடங்கு செய்யும் முறையும் வேத காலத்தில் அதாவது ரிக் வேத காலத்தில் செய்ததது போன்று தான் உள்ளது" என்றார். 

மேலும் இதுகுறித்து நீரஜ் ராய் கூறுகையில், "எங்களின் ஆய்வின் முடிவில் அவர்கள் உடல் நலத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் தான் இருந்துள்னர். மேலும் அந்த காலத்தில் வன்முறைகள் நடந்ததற்கான ஆதரங்களும் கிடைக்கவில்லை. இதெல்லாம்  அந்த காலத்தில் மக்கள் ஆரோக்கியமாக இருந்ததையும், அறிவார்ந்தவர்களாக இருந்ததையும் தான் காட்டுகிறது. மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்களின் மரபணுக்காளின் அடையாளம் ஹரப்பா நாகரிகத்தல் வாழ்ந்தவர்களிடம் இல்லை. ஆனால் சில ஈரானிய அடையாங்கள் உள்ளன" என்றார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.