காந்தியடிகளின் வழிகாட்டி நௌரோஜி பற்றி தெரியுமா?

  சுஜாதா   | Last Modified : 04 Sep, 2018 09:42 am

dadabhai-naoroji-biography

சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நௌரோஜியின் பிறந்த தினம் இன்று. காந்தி அடிகளுக்கு வழிகாட்டியாக இருந்த அவரைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

நௌரோஜி 1825ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி மும்பையில் பிறந்தார்.

  இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர்தான்.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார்.

 இவர் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியர்களின் துயரத்தை வெளிப்படுத்தினார். இவர் காந்தியடிகள், திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாக திகழ்ந்தவர்.

இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்ததை புள்ளி விவரத்துடன் எடுத்துக்கூறினார். இந்தியர்களின் தனி நபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870-ல் சுட்டிக்காட்டினார்.

 'பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா' என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார். தாதாபாய் நௌரோஜி தனது 91வது வயதில் (1917) மறைந்தார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.