புரட்சியாளர் பகத்சிங்கின் பிறந்தநாள்!

  திஷா   | Last Modified : 27 Sep, 2018 06:05 pm
bhagat-singh-birthday

இந்திய விடுதலைப் போராட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குவது நமது கடமை. கால ஓட்டத்தின் வேகத்தில் அதில் நிறைய பேரின் பெயர்கள் மங்கி விட்டன. ஆனால் எத்தனைக் காலம் கடந்தாலும், சிலரின் பெயர்கள் மட்டும் வைரத்தைப் போல் ஜொலிக்கும். இதில் முக்கியமானவர் மாவீரன் பகத்சிங். இன்று அவருடைய பிறந்த தினம்!

விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான இவர் ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இதற்காகவே இவர் 'சாஹீது' அதாவது மாவீரன் என அழைக்கப்பட்டார். ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பத்தில் பிறந்த பகத் சிங், இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 

பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட இவர், விரைவிலேயே 'இந்துஸ்தான் குடியரசு அமைப்பு' என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார்.  

இவர் 1907ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 27-ம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லயால்பூர் மாவட்டத்தின் “பங்கா” என்ற கிராமத்தில் பிறந்தார். சீக்கியக் குடும்பத்தில் சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்யாவதிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

லாகூரில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 1919ம் ஆண்டு, அம்ரிஸ்தர் நகரில் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில், ஆங்கிலேய அரசு அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நடத்தி, அவர்களை கொன்று குவித்தது. இதைக் கண்டு நாடே கொதித்தது. இந்த சம்பவம், பகத்சிங்கை மிகவும் பாதித்தது. தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்ற அவர், ரத்தம் படிந்த மண்ணை ஒரு பாட்டிலில் அடைத்து எடுத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார். வெள்ளையர்களை விரட்டாமல் தான் அமைதியாக மாட்டேன் என சபதமும் பூண்டார்.

அவரது தெளிந்த சிந்தனைகளைப் பார்க்கும் பொழுது அவரை சாதரணமாக எண்ணத் தோன்றவில்லை. காந்தி ‘வெடிகுண்டின் பாதை’ என்ற புத்தகத்தை எழுதினார் அதற்கு எதிராக ‘வெடிகுண்டின் தத்துவம்’ என்ற ஒரு அருமையான புத்தகத்தை பகத் சிங் எழுதினார்.

அம்மா, அப்பா, மாமா, என தனது ஒட்டு மொத்தக் குடும்பமும் விடுதலைப் போராட்டக்காரர்களாக இருப்பதால், பகத்சிங்கிற்கும் சிறுவதிலேயே அந்த வேட்கை துளிர் விட்டு விட்டது. தன்னுடைய பதிமூன்று வயதில், காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். ஆனால் 1922ம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார் பகத்சிங்.

அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெற முடியாது. ஆயுதம் ஏந்தினால் மட்டுமே நாம் நினைத்ததை அடைய முடியும் என்ற முடிவுக்கு வந்தார். 

லாகூர் கொலை வழக்கு 

1928ம் ஆண்டு, "சைமன் கமிஷனை" எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் லாலா லஜபதிராய் போலீசாரின் தடியடியால் இறந்தார். இதனால் சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் இணைந்து, இதற்கு காரணமான காவலதிகாரி சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்கள். 

அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட போது, பொது மக்கள் இல்லாத இடமாக பார்த்து குண்டுகளை வீசினர்.

அப்போது போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயரே இல்லை. பிற்காலத்தில்தான் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close