பகத்சிங் கொலைக்குற்றவாளி! வீண் பழியை சுமந்த வரலாறு!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 27 Sep, 2018 05:17 pm
is-this-bhagat-singh-is-a-killer

பகத்சிங் சுதந்திரப் போராட்ட வீரரா? அல்லது கொலைக்குற்றவாளி அல்ல என பலருக்கும் சந்தேகம் எழும் வகையில் பகத்சிங் வரலாறு அமைந்துள்ளது. 

சுதந்திர போராட்ட வீரர் என நம்மால் அறியப்பட்ட பகத்சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் குசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இந்தியாவின் முதல் மார்க்சிஸ்ட் என போற்றப்பட்டவர்.

இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அகிம்சை வழியில் ஓர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். 

காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் 1928 ஆம் ஆண்டு 17 ஆம் தேதி காலமானார். லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமான காவலரை சுட்டுக் கொன்றதற்காக 24 வயதில் தூக்குமேடையை தழுவியவர் பகத்சிங். இது பழைய வரலாறுதான் ஆனால் பகத்சிங் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து லாகூரில் பகத்சிங் நினைவு அறக்கட்டளை நடத்திவரும் இம்தியாஸ் ரஷித் குரேஷி எனும் வழக்கறிஞர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் குற்றமற்றவர் என லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு 
தொடர்ந்திருந்தார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. மேலும் பகத்சிங் குற்றமற்றவர் என அறிவித்து, அவருக்கு தேசிய விருது வழங்கவேண்டும் எனவும் கோரிவிடுத்திருந்தார். இதையடுத்து விசாரணைக்கு வந்த பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி சாண்டர்ஸின் என்பவரின் கொலைவழக்கில் பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகிய மூவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். முதலில் ஆயுள்தண்டனை அறிவிக்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதியன்று தூக்குதண்டனை நிறைவேற்றியது பிரிட்டீஷ் அரசு. பகத்சிங் மற்றும் அவரது நண்பர்கள் பிரிட்டிஷாரின் காலனியாதிக்க ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று
ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கவேண்டும் என்று போராடினார். இது பிரிட்டிஷாரை உருத்தியது. பின்னரே, அவர் இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டார் என
தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரி சாண்டர்ஸின் கொலைவழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கையை லாகூரின் காவல்துறையினர் அனார்க்கலி காவல்நிலையத்தில் கண்டுபிடித்தனர். 1928ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு எழுதப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில், சாண்டர்ஸைக் கொன்றவர்கள் ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வழக்கில் சம்பந்தமில்லாதமல் பகத்சிங் தொடர்பு படுத்தப்பட்டு தூக்கிலடப்பட்டது வேதனையிலும் வேதனை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close