பகத்சிங்கை சொந்தம் கொண்டாடும் பாஜக!

  ஐஸ்வர்யா   | Last Modified : 27 Sep, 2018 06:30 pm
what-is-a-link-between-bhagat-singh-and-bjp

ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக வீரத்துடன் போராடி இளைஞர்களின் மனதில் விடுதலை தீயை சுடர்விடச் செய்த பகத்சிங்கின் 111வது விடுதலைக்காக போராடியதால் கைது செய்யப்பட்ட பகத்சிங், அவரது நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் 1931 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர். தனது, 24 வது வயதில் நாட்டிற்காக தூக்கு மேடை ஏறிய பகத்சிங், தன் முகத்தை கருப்பு துணியால் கட்டவேண்டாம் என்று கூறி தாய்மண்னை பார்த்துக்கொண்டே உயிர் நீ்த்தார்.

தேச தந்தை காந்தியின் அஹிம்சையை வேர் அறுத்து வன்முறையை கையில் எடுத்த முதல் இளைஞர் என்ற பட்டம் பெற்ற பகத்சிங், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்ற ஏசுவின் கொள்கையை பின்பற்றி வாழ்ந்துவந்தார். வன்முறையை கையில் எடுத்தால் மட்டுமே வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடியும் என்பதில் உறுதியாய் இருந்தார். இதையடுத்து வன்முறையில் அதிரடியாக களமிறங்கிய பகத்சிங் ஆங்கிலேயரின் புத்தகங்களையும், உடைகளையும் எரித்து போராட்டத்தில் குதித்தார். காந்தி பாதையை கையில் எடுத்தால் வெற்றி பெறமுடியாது என்பதில் உறுதியாய் இருந்தார். அதற்கு உதாரணமாக சென்ட்ரல் சட்டப்பேரவையில் வெடிகுண்டு வீசி தாக்கினார். முக்கியமாக ரஷ்ய புரட்சியை படித்து அவருடைய வாழ்விலும் பின்பற்றினார். பகத்சிங் உடன் இருந்த சுகதேவ், ராஜகுரு உள்ளிட்ட பலர் இந்துத்துவ கொள்கையில் நம்பிகையுடையவர்களாக இருந்தர். எனவே பகத்சிங்கும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இருக்கு என ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் பகத்சிங்கை சொந்தம் கொண்டாடினர். 

சுகதேவ், சந்தர சேகர் ஆசாத் ஆகியோரோடு இணைந்து இந்துஸ்தான் சோசியலிச குடியரசு என்ற இயக்கத்தை தொடங்கினார். “எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பலமுறை ஏசியிருக்கிறேன்” என கடவுள் மறுப்பு கொள்கையையே பகத்சிங் பின்பற்றினார். பகத் சிங்கிற்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்கும் எந்த கொள்கை சார்பும் இருந்தது கிடையாது. அரசியல் ஆதாயத்திற்காக பாஜக சொந்தம் கொண்டாடுவதாக பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தானும் பகத்சிங்கை மாவீரர் என போற்றி கொண்டாடுகிறது. அதுமட்டுமின்றி லாகூரில் பஞ்சாப் மொழி பேசுபவர்களுக்கு அவர் ஒரு ஹீரோவாகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close