அறிவோம் செஞ்சிக்கோட்டை!

  டேவிட்   | Last Modified : 04 Nov, 2018 03:26 pm

all-you-need-to-know-about-fort-of-senji

தமிழக வரலாற்றில் செஞ்சி என்ற ஊருக்கு  ஒரு முக்கியமான பங்கு உண்டு. அங்கு கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. இது இந்தியாவில் எவரும் உட்புக முடியாத அளவிற்கு கோட்டைகள் சிறந்தது எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. 

செஞ்சியில் இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள்  ஆகியவை 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை.   பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர்கள் இருந்த  காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி,  அல்லது  சிங்கபுரி கோட்டம் என்பார்கள், அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்று வரலாறு கூறுகின்றது.

செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட த் துவங்கியதாகவும், அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றியதாகவும் வரலாறு கூறுகின்றது. குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டுகள் கோட்டையை விரிவுபடுத்தினர்.

செஞ்சி கோட்டையின் அமைப்பு:

செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள்  ஆகியவை தென்னிந்திய மன்னர்களுக்கு இருந்த கட்டடக் கலையின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக்கோட்டை  80 அடி  அகலமுள்ள அகழியினால் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என பல சிறப்பு மிக்க கட்டடக்கலையை கொண்டுள்ளது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, சக்கிலிதுர்கம் அல்லது சந்திரகிரி, ராஜகிரி ஆகிய குன்றுகள் உள்ளன. எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவைப்பாலம் இங்கு  உள்ளது. இப்படி பல நுண்ணிய வரலாற்று கட்டிடக் கலைகள் உள்ளன.

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன. இக்கோட்டைக்கு பெரும் அச்சானியாக இருக்கும் ஜைனர்களின் வரலாறுகள்  நீண்டது.

செஞ்சி கோட்டையின் தற்போதைய நிலை :

இறுதியாக, இக்கோட்டை பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழாத காரணத்தினால், 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனால் இப்போது  சமூக விரோதிகளின் கூடாரமாகவும், காதல் ஜோடிகளுக்கான மையமான  இருந்து வருகிறது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.