• வியட்நாம், ஆஸ்திரேலியாவுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்
  • ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி
  • தேனி, திருவாரூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
  • இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே
  • அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்

வேலூர்  கோட்டை ! அன்றும்... இன்றும்...!!

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 07:44 pm

vellore-fort-then-and-now

தமிழகத்தில் பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது இந்த வேலூர் கோட்டை. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத்கானாலும் கைப்பற்றப்பட்டது . இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760 ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர் என்றெல்லாம் வரலாறு கூறுகின்றது.

வேலூர் மாநகரின் மையத்தில் 133 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது வேலூர் கோட்டை. கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டுக் கொண்டுயிருந்த போது வேலூர், திருப்பதி, சென்னை போன்றவை விஜயநகர பேரரசுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. விஜயநகர பேரரசுவின் பிரதிநிதியாக  இருந்த பொம்மு நாயக்கர் என்ற குறுநில மன்னரால் வேலூர் கோட்டை கட்டப்பட்டது.
நவாப் வசமிருந்த வேலூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் வென்றயிடம் ஆற்காடு. அவர்கள் அங்கிருந்து ஆளும் போது அருகில் இருந்த வேலூர் கோட்டையை வெடி மருந்துகள், இராணுவ வீரர்கள் பாதுகாக்கும் இடமாக வைத்திருந்தனர்.
கருங்கல்லால் இன்றும் கம்பீரமக காட்சியளிக்கிறது. கோட்டையை சுற்றி அகழிகள் வெட்டப்பட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இக் கோட்டை கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளதால் இதன் பாரியமதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது வேலூர் கோட்டை.
இக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறிஸ்தவ தேவாலயம், பள்ளிவாயில் என்பனவும் உள்ளன. பிரித்தானியருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக்கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.

வேலூர் கோட்டையில் உள்ள சர்வ மதம் :
கோட்டைக்குள் நுழைந்ததும்மே வடக்கு பக்கம் இந்துக்களுக்காக ஜலகண்டேஸ்வரர் கோயிலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தெற்கு புறம் மசூதியும், ஆங்கிலேயர்கள் பிரார்த்தனை செய்ய தென்மேற்கு பகுதியில் சர்ச்சும் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் 1566 பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. அதே போல் தென்னிந்தியாவின் முதல் அரபுக் கல்லூரியான ஜாமி ஆ பாக்கியத்துல்லா என்ற கல்லூரி இதன் அருகே உள்ளது. 

வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம் :
இங்கு திப்புசுல்தான் வாரிசுகள் பயன்படுத்திய நாணயங்கள், கிண்ணங்கள், வாள்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் கிடைத்த தொல்பொருட்கள், ஓடுகள், மண்பானைகள், கல்வெட்டுகள், செப்பு தகடுகள், கத்திகள், பீங்கன் கிண்ணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டைக்குள் உள்ள கட்டிடங்கள் திப்பு மகால், ஐதர் மகால், பேகம் மகால், கண்டி மகால், பாதுஷா மகால் என பெயர் வைத்து அழைக்கப்படுகின்றன.


கோட்டையின் தென்கிழக்கு மூலையில் கோட்டை உச்சியில் தேசியகொடி ஏற்ற 100 அடி கொடிமரம் அமைத்துள்ளனர். வேலூர் கோட்டை வரலாற்றை போற்றும் வகையில் 2006ல் வேலூர் புரட்சி நடந்த 200வது ஆண்டை முன்னிட்டு தபால் தலை வெளியிடப்பட்டது. காவல்துறை பயிற்சி கல்லூரி, வட்டாச்சியர் அலுவலகம், பத்தரப்பதிவு அலுவலகம் என பல அரசு அலுவலகங்கள் உள்ளே இயங்குகின்றன.

படகு சவாரி :
கோட்டை அகழியில் படகு சவாரி வசதியை சுற்றுலாத்துறையும் – தொல்பொருள் துறையும் சேர்ந்து செய்து தந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் கோட்டைக்கு வெளியே மூன்று இடங்களில் பூங்கா வசதி செய்து தந்துள்ளார்கள். குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டையின் தற்போதைய நிலை
தற்போது புதர் மண்டிக்கிடக்கும் வேலூர் கோட்டை தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டையை எப்போது வேண்டுமானாலும் சுற்றி பார்க்கலாம். அருங்காட்சியகம், மஹால்களை மாலை 5 வரை மட்டுமே பார்க்க அனுமதி. ஒரு முறை சென்றால் இந்த கோட்டை தனக்குள் வைத்துள்ள வரலாறுகள் நமக்கு பல படிப்பினைகளை, வரலாற்று தகவல்களை வழங்குகிறது. இக்கோட்டைக்கு காதல் ஜோடிகளின் வரத்தும் அதிகம். தற்போது கோட்டை முழுவதும் குப்பை குவிந்து காணப்படுகிறது என்பது தான்  சற்று முகம் சுழிக்க வைக்கிறது.
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.