புதுக்கோட்டை திருமயம் மலைக்கோட்டையின் வரலாறு !

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 03:07 pm
pudukkottai-thirumayam-malaikkottai

புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள  திருமயம் மலைக்கோட்டை கி.பி 1676ல்  விஜயரகுநாத சேதுபதி   என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை திருமயம் பகுதியில் விஜயநகர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

எதிரிகளிடமிருந்து தன் நாட்டைப் பாதுகாக்க  சிறியதாய் வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டு, பின்னர்  ஏழு சுற்று மதில்களால் உருவாக்கப்பட்டது,  இக்கோட்டை என தொல்லியல் துறை கூறுகிறது. ஆனால்  இன்று மூன்று சுற்று மதில்கள் மட்டுமே காணப்படுகிறது. உட்கோட்டை கருங்கல், மதிற்சுவர்களின் மேலே செங்கல் மற்றும் சுண்ணாம்பால் ஆன கைபிடிச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு ஆயுதங்களை வைப்பதற்கும், படைவீரர்கள் மறைந்து கொண்டு தாக்குவதற்குமான இடமாக இருந்துள்ளது. 

இக்கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்துள்ளன. அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் நம்மால் காண முடிகிறது. ஆனால் தற்போது அகழிகள் முற்றிலும் சிதைந்து காணப்படுகிறது. இம்மலைக்கோட்டையின் உச்சியில் காவல் அரணாக 20 அடி நீளம் கொண்ட ஓர் உயர்ந்த மேடை அமைக்கப்பட்டு ஆங்கிலேயர் காலப் பீரங்கி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இக்கோட்டை ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது.

திருமயம் மலைக்கோட்டைக்குள் நுழைய மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இவை முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்குத் திசைகளில் அமைந்துள்ளன. கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன. இக்கோட்டையில் தனிதனியே அருகருகில் கோயில்கள் அமையப்பெற்றுள்ளது. அக்கோவிலில்  தா்பார் மண்டபம், தூண்களுடன் கூடிய பிரகாரம் மற்றும் பல்வேறு கடவுளா்களுக்கான சிலைகள் அமைந்துள்ளன. இந்த கோவில்களுக்கு அருகில் மிகப்பெரிய கல்வெட்டுகளும் அமைந்துள்ளது.மேற்க்குறிப்பிட்ட   மூன்று நுழைவாயில்களிளும் பைரவர், அனுமான், சக்தி கணபதி போன்ற காவல் தெய்வங்கள் காவல் காத்து வந்துள்ளதாக வலராறு குறிப்பிடுகிறது.  இன்றும் இக்கோயில்களில் மக்கள் வழிபட்டு செல்கின்றனர்.  வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துறை இங்கு சிறை வைக்கப்பட்டு புதுக்கோட்டை தொண்டைமானால் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக  வரலாறு சொல்கிறது. அதனால் இக்கோட்டைக்கு ஊமையன் கோட்டை என்று மற்றொரு பெயரும் உண்டு.

கோட்டையில்  சிறிய குடைவரைக் கோவில்:

இக்கோட்டை பகுதியில் ஒற்றை அறையுடன் க குடைவரைக் கோவில் ஒன்று சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குடைவரைக் கோவிலிலுள்ள தரையின் நடுவில்  ஒரு சிவ இலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் சதுரவடிவமாக அமைந்துள்ளது.  குகையின் நுழைவாயிலில் பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களும் மேலே விட்டமும் அமைந்துள்ளன. குகைக்குச் செல்ல இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் இரும்பில் ஏணிப்படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். கோட்டையின் மேற்குப் பகுதியில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன.

அருங்காட்சியகம் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக திருமயம் கோட்டையில்லிருந்து  சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப் போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது திருமயம் கோட்டை :

தற்போது தொல்லியல் துறை கட்பாட்டில் உள்ள திருமயம் கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோட்டைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் அடிக்கடி சுற்றுலா வந்து செல்கின்றனர். இதேபோல் இந்த கோட்டையில் அவ்வப்போது  சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வந்தது.   வரலாற்று சிறப்பு மிக்க இக்கோட்டையை   பொலிவாக்க வேண்டும் என்பதே சுற்றுல்லா வரும் பயணிகளின் விருப்பம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close