மாமல்லபுரத்தில் இருக்கிற புலிக்குகை தெரியுமா?

  இளங்கோ   | Last Modified : 15 Nov, 2018 08:00 pm

mamallapuram-tiger-cave

சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம். இது, ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களின் முக்கியத் துறைமுகமாக இருந்ததாக  ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது.  இந்த துறைமுக நகரத்தை மேம்படுத்த மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்ம பல்லவன் சிறப்பு கவனம் செலுத்தியதாக சொல்லப்படுகிறது. இவரது சிறப்பு பெயர்களில் ஒன்று மாமல்லன். இவர் சிறந்த போர் வீரர் என்பது மட்டும்மல்லாமல்  சிறந்த  வீரனாகவும் இருந்திருக்கிறார். அதனால் இந்த நகரத்திற்கு மாமல்லபுரம் என்று பெயர் வந்தது என்றும் அது காலபோக்கில் மகாபலிபுரம் என்று  அழைக்கபடுவதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம் உள்ளது.  அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் யூனெஸ்கோ  சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. புலிக்குடைவரை அல்லது புலிக்குகை என்றும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் 2004ஆம் ஆண்டு வந்த சுனாமியால் நடந்த ஒரே நல்ல விஷயம் இந்த புலிக்குகை என்கின்றனர். இது சாதாரண கட்டிடம் அல்ல. தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான் என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள்.

அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம், சங்க காலத்தை சேர்ந்தது.   இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு ஆகியனவற்றில் கிடைக்கப்பெற்ற கற்களோடு ஒத்துப்போவதாக சொல்லப்படுகிறது.  செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாகவும் உள்ளது. 

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சிறிய பாறையொன்றைக் குடைந்து இந்த குடைவரை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரை,  நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடை போன்ற அமைப்பில் உள்ளது.  இதன் தளம்,  நிலத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளது இத்தளத்தை அடைவதற்கு அதன் முன்புறத்தில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பில் இந்த மண்டபத்தைச் சுற்றி 16 யாளித் தலைகள் அரை வட்ட அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டில் காணப்படும் ஏனைய குடைவரைகளிலேயே  வேறுபாடான அமைப்பைக் கொண்ட இக்குடைவரையை குறித்து பல கருத்துகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு கோவில் என்று சிலரும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடையாக இருக்கலாம் என வேறு சிலரும், முன்னேயுள்ள வெளியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மன்னர் அமர்ந்து பார்ப்பதற்கான மேடையே இது என இன்னொரு சாராரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அருகில் உள்ள கல்வெட்டு ஒன்றில்,  "திருவெழுச்சில்" என்னும் சொல் காணப்படுகிறது. திருவெழுச்சில் என்றால் இறைவன் அல்லது அரசன் எழுந்தருளும் இடம் எனப் பொருள்படும். ஆகையால் இது ஒரு உற்சவ மண்டபமாகவோ, அரசன் அமரும் இடமாகவோ இருக்கலாம் என்ற மாற்றுக் கருத்தும் உள்ளது. பல வருடங்களுக்கு முன்னரே நாம் எவ்வளவு அறிவு மிகுந்த பொக்கிஷத்தோடு வாழ்ந்த்திருக்கிறோம்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.