தண்டட்டி, பாம்படம், பாப்படம்... என்ன இது?

  இளங்கோ   | Last Modified : 18 Nov, 2018 03:02 pm

heritage-ear-rings-of-old-women

தமிழ் நாட்டின் பண்டைய பண்பாட்டு அடையாளமாக நம் பாட்டிமார்கள், காதில் தொங்கும் அளவிற்கு நகைகளை அணிந்தவண்ணம் இருப்பார்கள். அதை அப்போது இருந்த பாட்டிமார்கள் தண்டட்டி என்றும், பாப்படம் என்றும் சொல்வார்கள். 

பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று தண்டட்டி.  இவை தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலனாகும். இந்த காதணியை அணிவதற்காகவே காது வளர்க்க வேண்டியிருக்கும். இதற்காக அந்தக் காலப் பெண்கள் காது வளர்த்தனர். தென் தமிழகத்தில் உள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. அந்த காலத்து பெண்கள் சிறுவயதிலேயே காதுகுத்தி மரத்துண்டு பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சம் மாக காதை நீளமாக்கி தண்டட்டி, பாப்படம் அணிந்து கொண்டனர்.

பாம்படம் என்பது பந்து,கனசதுரம், வட்டங்கள் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவகவடிவங்கள் கொண்ட ஒரு வடிவியல் வடிவமைப்பில் செய்யப்படுபவை. ஒரு பறவை அல்லது ஒரு பாம்பு போல தோற்றம் அளிக்கும். இப்படி பல வகைகளில் இருக்கும் பாப்படம். 

தண்டட்டி என்பது செவ்வகங்கள் மற்றும் முக்கோண வடிவங்கள், அரைவட்டம், கோளங்கள் கொண்ட ஒரு வடிவியல் அமைப்பைக் கொண்டது. இது முப்பரிமாண அமைப்பில் இருக்கும்.  காலப்போக்கில் பெண்கள் இந்த தண்டட்டியை அணியாத தால் மறைய தொடங்கின. தற்போது வயதான ஒரு சில பாட்டிமார்கள் மட்டுமே இந்த அணிகலன்கள் அணிந்து கொண்டிருக்கின்றனர்.

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தண்டட்டி என அழைக்கப்படும் காதணி தான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மக்கள் பாம்படம் அல்லது  பாப்படம் என்று அழைக்கின்றனர். 
சங்க காலத்தில் தினைகளை மேய வரும் பறவைகளை விரட்டுவதற்காகத் தமிழ் பெண்கள் காதணியைக் கழற்றி வீசி தினைகளை மேயாதவன்ணம் பார்த்து கொள்வார்கள் என்று கதைகள்  மூலம்  சொல்லப்படுகிறது. முன்பு எல்லாம் கிராமத்தில் நம் எல்லோர் வீட்டிலும் பாட்டிமார்கள் காது தொங்கும் அளவிற்க்கு தண்டட்டியை அணிந்த வண்ணம் இருப்பார்கள்.ஆனால் தர்ப்போது வெகு சில பாட்டி மார்கள் மட்டுமே பாம்படம் அணிந்து நம்மோடு இருகிறார்கள். 

நம் தமிழ் பெண்கள் அணியும் காதணிகளுக்கு  ஓலை, கடுக்கன், கம்மல், கற்பூ, காதோலை, குண்டலம், குதம்பை, குழை, கொப்பு, செவிப்பூ, செவிமலர், டோலாக்கு, லோலாக்கு, தண்டட்டி, தண்டொட்டி, தாடங்கம், தொங்கட்டான், தோடு, மகரகுண்டலம், மகுடம், முருகு, வல்லிகை, வாளி, ஜிமிக்கி. என்றெல்லாம் சொல்லப்படுகிறது. 

ஆதி காலம் தொட்டே பெண்களின் கவர்ச்சிரமான உடல் ஆண்களின் கவனத்தை கவர்ந்து அவர்களை மகிழ்விப்பதற்காக ஆடை அணிகலன்களாக பெண்கள் ஆபரங்களை அணிந்தார்களாம். பெண்கள் ஆபரணங்கள் அணிவது ஆண்களுக்குத்தான் என்று முன்பு சொல்லப்பட்டது.

உதாரணத்திற்க்கு பெண்கள் அணியும் ஒட்டியாணம் அவர்களுடைய குறுகலான இடையை வெளிப்படுத்தும் என்றே சொல்லலாம். அதேபோல், காதணி கவர்ச்சிகரமான காதமைப்பையும் தரும். இப்படி பெண்கள் அணியும் ஒவ்வோரு அணிகலன்களும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது.  ஆனால் காலப்போக்கில் ஒரு சில பெண்கள் காதணிகளை அணிவதும் இல்லை விரும்புவதும் இல்லை. பெண்ணே! பெண்மையை போற்று.  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.