அமெரிக்காவின் கலர்ஃபுல் நதியை பற்றி உங்களுக்கு தெரியுமா? அமேஸிங் போட்டோஸ்..

  முத்துமாரி   | Last Modified : 07 Jan, 2018 06:07 am

அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் இருக்கும் ‘கேனோ கிரிஸ்டெல்ஸ்’ என்ற நதி, வண்ணமயமான ஒரு மாய நதியாக காட்சியளிக்கிறது.

கொலம்பியா மேத்தா மாகாணத்தை ஒட்டி இருக்கும் இந்த நதி 100 கிமீ( 62 மைல்) நீளமுடையது. 'குய்யேபரோ' என்ற ஆற்றின் துணை நதியாகும்.

இந்த ஆற்றின் தண்ணீர் மிகவும் சுத்தமாக இருக்கும். ஆனால் நதியின் வழித்தடத்தில் வளர்ந்திருக்கும் வண்ணமயமான பாசிகள் இதை ஒரு மாய நதியாக காட்டுகிறது. இந்த நதியில் சிவப்பு, பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு என பல வண்ணங்களை நம்மால் காண முடியும்.

இந்த ஆற்றைச் சார்ந்து 420 பறவை இனங்கள், 43 ஊர்வன இனங்கள், நீர் நில வாழ்விகள், 32 விலங்கினங்கள் உள்ளன. மேலும் இந்த நதியை பல்வேறு தாவரங்களும் சூழ்ந்துள்ளன.

மழை காலத்திற்கு பிறகு அதாவது ஜூலை- நவம்பர் கால கட்டங்களில் ஆற்றுப்படுகையானது சிவப்பு-பிங்க் நிற கலரில் இருக்கும். அந்த சமயத்தில் அந்த நதியை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்குமாம்..

அமெரிக்காவின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த நதியை பார்வையிட ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் இறுதி முதல் டிசம்பர் மாதம் வரை அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் நதியை ஒட்டி ஒரு தேசிய பூங்காவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close