ஸ்டீவ் ஜாப்ஸ்க்கும் - மகாத்மாவுக்கும் உள்ள தொடர்பு; இது வரை அறியா உண்மைகள்

  Sujatha   | Last Modified : 30 Jan, 2018 03:34 pm

நம் நாட்டின் தேச பிதாவாகவும், சுதந்திரம் வாங்கி தந்த தலைவராகவும், மகாத்மா காந்தியை நாம் அறிவோம். 1948ம் ஆண்டில் சுட்டு கொல்லப்பட்ட இவருக்கு இன்று 70வது நினைவு தினமாகும். அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மகாத்மாவை பற்றி நாம் அறியா சில வியத்தகு உண்மைகள் பின்வருமாறு :

மகாத்மா காந்தி அமைதிக்கான நோபல் பரிசிற்காக 5முறை பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அந்த பரிசு வழங்கப்படவில்லை.

4 கண்டங்களில் உள்ள 12 நாடுகளின் அடிப்படை உரிமையை நிவர்த்தி செய்வதற்கான இயகங்களுக்கு பொறுப்பேற்றிருந்தார் எம்.ஜி.காந்தி.

மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம் 8 கிலோமீட்டர் நீளம் நடைப்பெற்றது.

எந்த நாட்டிடம்(பிரிட்டன்) இருந்து இந்தியா சுதந்திரம் அடைய காந்தி போராடினாரோ, அந்த நாடு காந்தி இறந்த 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைக் கௌரவிக்கும் வகையில் அவர் முகம் பதித்த தபால் தலையை வெளியிட்டது.

மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதிலும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 18 கிலோமீட்டர் தூரம் நடைப் பயணம் செய்தார். (இது இரண்டு முறை உலகம் முழுவதும் சுற்றி வருவதற்கு சமம்)

போர்(Boer) யுத்தத்தின் போது காந்திஜி இராணுவத்தில் பணியாற்றினார் - போரின் கொடூரங்களை உணர்ந்துகொண்ட பின்னர் வன்முறைக்கு எதிராக அவர் போராடினார்.

மகாத்மா காந்தி தேச தலைவர்களை தாண்டி, ஆராய்ச்சியாளர்கள்,எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருந்தார். குறிப்பாக டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன், சார்லி சாப்ளின் மற்றும் ஹிட்லர் என அதில் பலர்...

காந்திஜியின் நினைவு சின்னங்கள், குறிப்பாக அவர் சுடப்பட்ட போது அணிந்திருந்த ஆடைகள் போன்றவை மதுரை காந்தி மியூசியத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

காந்தி இறப்பதற்கு முன்பு காங்கிரஸை கலைக்க நினைத்தார்.

மொபைல் உலகின் ஜாம்பவானும், ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்டீவ் ஜாப், மகாத்மாவின் தீவிர ரசிகர். அதனால் தான் அவர் காந்தியின் நினைவாக வட்ட வடிவ கண்ணாடி அணிந்திருந்தார். மேலும் காந்தியை கௌரவிக்கவும் தான் இதை அணிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

காந்திஜி செயற்கை பல் செட் அணிந்திருந்தார். அதனை எப்போதும் தனது இடுப்பு துணியில் முடிந்திருப்பார்.

மகாத்மா காந்தியின் ஆங்கிலம் ஐரிஷ் உச்சரிப்பில் பேசுவார், ஏனெனில் அவரது முதல் ஆசிரியர்களில் ஒருவர் ஒரு ஐரிஷ் நபராக இருந்தார்.

இந்தியாவில் 53 முக்கிய சாலைகள் (சிறியவை தவிர்த்து), மற்றும் இந்தியாவுக்கு வெளியே 48 சாலைகள் அவர் பெயரில் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close