இந்த காதலர் தினத்துக்கு எங்க போலாம்னு பிளான் போட்டாச்சா.. #ValentineDaySpecial

  நந்தினி   | Last Modified : 13 Feb, 2018 08:00 pm

எவ்ளோ ஸ்பெஷலான நாள்கள் இருந்தாலும் இந்த காதலிக்கிறவங்களுக்கு என்னமோ, பிப்ரவரி 14ம் தேதி என்னும் காதலர் தினம் தாங்க எல்லாத்தையும் விட பெஸ்ட், அதையெல்லாம் ஏன்னு கேட்க கூடாது. இந்த நாளுக்காக தான் சில பேரு, 'இணைக்கு கண்டிப்பா நம்ம லவ்வ, அவங்ககிட்ட சொல்லிடனும்னு' வெய்ட் பண்ணுவாங்க. அப்போதான் அது ஸ்வீட் மெமரிஸா அமையுமா.. சில பேர் ஏற்கனவே ஜோடி சேர்ந்து, இந்த நாள சூப்பரா கொண்டாடணும்னு பிளான் போட்ருப்பாங்க.. சில பேர் வேலண்டைன் டேல சேர்ந்த அப்பறம் எங்க போய் நம்ம மெமரிஸா சேர்க்கலாம் என டிசைட் பண்ணுவாங்கா.. அவங்கலாம் இங்க பாக்குற இடங்கல்ல எதையாவது ஒன்னு உங்களுக்கு புடிச்ச மாதிரி இருந்துச்சுன்னா பிக்ஸ் பண்ணி வெச்சிக்கோங்கா.. யூஸ் ஆகும்.

ஊட்டி, தமிழ்நாடு: இங்கிருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைகள் நம்மை அசரவைக்கும். இந்த வேலண்டைன் டேக்கு மிகவும் சிறப்பான இடம் என்றே சொல்லலாம். மலை நிலையங்கள் நிறைந்த அந்த நகரத்தில் வீசும் குளிர்ந்த காற்றுடன் ஊரை சுற்றி பாருங்கள். மேட்டுப்பாளையத்தில் இருந்து ட்ரைனில் செல்லும் போது தான், நாம் இன்னும் அதிகமாக ஊரை ரசிக்க முடியும்.

குமரகோம், கேரளா: இந்தியாவின் ரொமான்டிக் இடங்களில் இது மிகவும் பேமஸ் ஜோடிகளே.. தாமரை நிறைந்த நதியில், தங்களுடைய துணையுடன் மென்மையாக போட்டிங் செய்து பாருங்க.. அந்த அழகிய நகரத்தில். அங்கு அந்த கலாச்சார படகுவீட்டில் பயணம் செய்வதில் இருக்கும் மகிழ்ச்சியே தனி. ஜோடியும் போட்டிங் தனியா போங்க..

ஆக்ரா, டெல்லி: அந்த காலத்தில் உருகி உருகி காதலித்த ஷாஜகான், தனது காதலிக்காக கட்டிய சமாதியான, தாஜ் மஹால்.. தற்போது காதலர்களின் சின்னமாக உள்ளது. தாஜ் மஹாலின் அற்புதமான மகிமை நம்மை நிஜமாகவே உருக வைக்கும். மாலை பொழுதில் மேலும் அந்த இடத்தின் பிரதிபலிப்பு நம்மை மேலும் அசரவைக்கும்.

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர்: எல்லை பிரச்னை ஒரு பக்கம் இருக்கட்டும்.. காஷ்மீரின் ஸ்ரீநகரில் கொட்டும் அந்த வெள்ளை பனியில் தன் காதலுடன் நனைய விரும்புங்கள்.. அங்கிருக்கும் டால் என்னும் நதியில், மாலை நேரத்தில் பயணம் செய்யவும் மறந்து விடாதீர்கள்.

ஹவ்லாக், அந்தமான் தீவு: சூரியன், கடல், மணல் ஆகியவை அனைத்தும் நம் கண்கவரும்.. கதர்களுக்கு இது சொர்கமாகவே இருக்கும். வேலண்டைன் டேவுக்கு இந்த இடமும் விருப்பமாக தேர்வு செய்து கொள்ளலாம். சூரியன் மறையும் நேரம்.. தங்கநிற மணலில் காதலுடன் நடந்து செல்லுங்கள்.. இங்கு ஸ்கூபா டைவிங்கும் செம்ம பேமஸ்.. ட்ரை பண்ண மறக்காதீங்க.

மூணார், கேரளா: அற்புதமாக உருண்டுகொண்டு ஓடும் மலை, தேயிலை தோட்டம், பச்சைநிற நிலங்கள், கண்ணுக்கினிய அழகு போன்றவற்றைகளை கொண்ட இந்த இடம், காதலர்களின் ரொமான்டிக் இடங்களில் ஒன்று.

கோவா: கடல் மற்றும் பார்ட்டிகளுக்கு மட்டும் கோவா பேமஸ் இல்லை.. அங்கிருக்கும் பழைமையான, அழகான கோட்டைகளும் நம்மளை கவரும். ஜோடிகள் அமைதியாக நேரத்தை கழிக்க வேண்டுமென்றால், தென் கோவாவை தேர்ந்தெடுங்கள்.

மணாலி, ஹிமாச்சலப்பிரதேசம்: எழில் கொஞ்சும் அந்த பனி மூட்டங்கள், அழகான காட்சிகள் நிச்சயம் வேலண்டைன் டேவை மேலும் ஸ்பெஷலாக மாற்றும். கடற்கரை, அசரடிக்கும் இயற்கை காட்சிகள் அனைத்தும் சொர்க்கத்தில் இருப்பது போன்று உணரவைக்கும்.

மாலத்தீவு: உலகளவில், ஹனிமூன் செல்லும் எல்லா ஜோடிகளும் தேர்வு செய்யும் இடமாக மாலத்தீவு இருக்கும். அந்த நீல நிற கடல் மட்டுமே போதும் நம்மை சுண்டி இழுக்க.. ஹனிமூனுக்கு மிஸ் பனிருந்தா, இந்த வேலண்டைனுக்கு போய்டுங்க.. காதலர்களுக்கு இது மிகச்சிறந்த இடம். நீர் விளையாட்டு, கடற்கரையோரத்தில் நேரத்தை செலவிடுதல் உள்ளிட்டவை மனதுக்கு நிம்மதியை தரும்.

பாலி, இந்தோனேஷியா: மிகவும் ரொமான்டிக் இடங்களில் முக்கியத்துவமாக இந்த இடம் பார்க்கப்படுகிறது. பலவகையான ரொமான்டிக் இடங்கள் அடங்கிய தீவு. அதுவும் இரவு நேரங்களில் கடற்கரையில் நேரத்தை செலவிட அற்புதமான இடம். நம்மளுடை ஓய்வு நேரம், சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவற்றிற்கு ஏற்ற இடம்.. இந்தியர்களுக்கு இலவச விசா வழங்கும் இந்தோனேஷியாவுக்கு விமான செலவும் அவ்ளோ அதிகமில்ல.. ரொமான்டிக் தீவு என்ற பாலி அழைக்கப்படுகிறது. உலகத்தில் மாலத்தீவு, பாலியை விடவும் எழில் கொஞ்சும் தேசங்கள் இன்னும் ஏராளம் இருக்கு..

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.