தேசிய பெண் குழந்தைகள் தினம்

  Sujatha   | Last Modified : 24 Jan, 2018 06:46 am


இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியாக 1996ஆம் ஆண்டு ஜனவர 24 ஆம் தேதி பதவி ஏற்றார். அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள்  தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக  அனுசரிக்கப்படுகிறது.

கல்லிப்பால் கலாச்சாரமும், கரும்பலகை இல்லா மாநிலமும் இன்றளவும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றை தடுக்க அரசாங்கம் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும், அதனை வேரோடு அழிக்க முடியவில்லை. ஆங்காங்கே அதன் சுவடுகள் இருந்தவண்ணம் உள்ளன.  எனவே பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளை போல் சமமாக நடத்தி அவர்களின் வாழ்விற்கும் நாமும் துணையாக நிற்போம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close