ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ்

  Sujatha   | Last Modified : 10 Feb, 2018 08:21 am

 உயிரியலில் மிகச் சிறப்பாக பங்காற்றிய ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் (John Franklin Enders ) 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

இவர் பாக்டீரியாக்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியின் ஆற்றல் குறித்து சில காரணிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். அதன்பிறகு தன் குழுவினருடன் இணைந்து பொன்னுக்கு வீங்கி அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைக் குணப்படுத்தும் நோய் எதிர்ப்புச்சக்தி மருந்தையும் கண்டறிந்தார். 

போலியோ தடுப்பு மருந்து தயாரிப்புக்கு காரணமாக அமைந்த புதிய, ஆபத்து இல்லாத முறையிலான போலியோமையெலிட்டிஸ் (poliomyelitis ) வைரஸ்கள் உற்பத்திக்கான ஆய்வுகளுக்காக டி.ஹெச்.வெல்லர் மற்றும் எஃப்.சி.ராபின்ஸ் இருவருடன் இணைந்து இவருக்கு 1954ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவர்களது ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகளால் போலியோ வைரஸ்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிந்தது. இந்த ஆராய்ச்சி முறை, போலியோ மருந்து தயாரிப்புக்கு மட்டுமல்லாமல், பிற வைரஸ்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.

நோபல் பரிசு தவிர, ராபர்ட் காச் பரிசு (Robert KochPrize) பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சிக் களத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி, மனிதகுலத்துக்கு மகத்தான சேவை புரிந்த ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் 88 வயதில் மறைந்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close