வாழ்க்கையிலும் சண்டைபோட்டு வெற்றிபெற்ற விஜேந்தர்! குத்துச்சண்டை வீரரின் வெற்றியின் கதை

  Sujatha   | Last Modified : 23 Feb, 2018 04:41 pm


இந்திய பாக்சிங் உலகில் முக்கிய நபராக இருப்பவர் விஜேந்தர் சிங். குத்துச்சண்டை நடக்கும் ரிங்குக்குள் மட்டுமல்ல... ஒலிம்பிக் மெடல் வெற்றியாளர் என்ற பெருமையை பெற வாழ்க்கையிலும் பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறார். அவரது பயணம் எப்படி வெற்றி பெற்றது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்...

விஜேந்தர் சிங் பெனிவால் ஹரியானாவில் உள்ள பியவானி மாவட்டத்தில் 1985ம் ஆண்டு 29ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை மகிபால் சிங் பெனிவால் அரசு பேருந்து ஓட்டுநர். சற்று வறுமையில் வாடிய இவர், தனது இரு மகன்களையும் (விஜேந்தர் மற்றும் அவரது அண்ணன் மனோஜ்) படிக்க வைக்க இரவு பகல் பார்க்காமல் தூக்கமின்றி வேலை செய்தார்.

இவர்களது தாத்தா ஒரு குத்துச்சண்டை வீரர் என்பதால், சிறுவயதில் இருந்தே தனது தாத்தாவிடம் பயிற்சி எடுத்து வந்தனர், விஜேந்தர் மற்றும் மனோஜ். ஆனால் முறையான பயிற்சியை மேற்கொள்ள அதிகம் பணம் தேவைப்படும் என்பதனாலும், அப்பாவின் குடும்ப பாரத்தை இறக்குவதற்காகவும், மேலும் தனது தம்பி குத்துச்சண்டையில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையினாலும், மனோஜ் சிங் ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் கிடைத்த வருமானம் முழுவதையும் மாத மாதம் தனது தம்பியின் குத்துசண்டை பயிற்சிக்கு செலவு செய்த மனோஜ், தனது வாழ்க்கையின் இலட்சியத்தை தம்பியின் மூலம் நிறைவு செய்தார். 


குத்துச் சண்டை பயிற்சி:

தந்தை மற்றும் அண்ணன் வருமானத்தை கொண்டு பூவானி குத்துச்சண்டை சங்கத்தில் குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொண்டார் விஜேந்தர் சிங். அவரின் திறமையையும், ஆர்வத்தையும்  கண்டு கொண்ட தேசிய குத்துச் சண்டை வீரர் ஜெகதீஷ் சிங், தானே முன் வந்து  விஜேந்தரருக்கு பயிற்சி அளித்தார். இதனால் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளை எதிர்கொண்டு வெற்றிகளை குவித்தார் விஜேந்தர்.

சர்வதேச போட்டிகளும்- வெற்றிகளும்:

தேசிய மட்டத்தில் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றதால், 2004 ஏதென்ஸ் கோடைகால ஒலிம்பிக் மற்றும் 2006 காமன்வெல்த் போட்டிகள் போன்ற பல சர்வதேச போட்டிகளில் போட்டியிட விஜேந்தர் தேர்வு செய்யப்பட்டார்.   2006 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கஜகஸ்தானின் பக்தியார் ஆர்ட்டேவ்க்கு எதிரான அரையிறுதி போட்டியை வீழ்த்தியதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 2008 பெய்ஜிங் கோடைக்கால ஒலிம்பிக்கில், அவர் எக்குவடோர் கார்லோஸ் கோங்கோராவை 9-4 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கல பதக்கம் பெற்றார். 

விஜேந்தர் சிங் பெனிவால் தனது 22 வயதில் வாங்கிய ஒலிம்பிக் வெண்கலம் தான் குத்துச்சண்டையில் இந்தியா வாங்கிய முதல் வெண்கல பதக்கம்.  இதற்காக, இந்திய அரசு இவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, நான்காவது உயர்ந்த குடிமகன் கௌரவம் போன்ற விருதுகளை வழங்கியது.2009 ஆம் ஆண்டு விஜேந்திரர் உலக அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டார், அங்கு அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதே ஆண்டில், சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (AIBA) 2800 புள்ளிகளுடன் தனது ஆண்டு மிடில்வெயிட் பிரிவு  பட்டியலில் முதலிடத்தை வகித்த குத்துச்சண்டை வீரராக விஜேந்தரை அறிவித்தது. 

இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழும் விஜேந்தர் சிங், இதுவரை விளையாடியுள்ள 9 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் (WBO Oriental) மற்றும் ஆசிய பசிபிக் (Asia-Pacific)  பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார். 

இந்த நிலையில் கடந்த வருடம்(2017) டிசம்பர் 23ம் தேதி   விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் போட்டியிட்டார்.  34 வயதான எர்னெஸ்ட் அம்ஜூ இதற்கு முன்  25 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டவர். போட்டியின் முன் செய்தியாளர்களிடம் பேசிய  எர்னெஸ்ட் அம்ஜூ, விஜேந்தர் முதல் தோல்வியை சந்திக்கப் போகிறார். அவரை 3 அல்லது 4-வது ரவுண்டிலேயே நாக் அவுட் செய்து வெளியேற்றுவேன் என கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்து 10 சுற்றிலும் மண்ணை கவ்வினார் அம்ஜூ   விஜேந்தர்சிங் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


திருமண வாழ்க்கை:

2011ம் ஆண்டு மே 17ம் தேதி விஜேந்தர் சிங் அர்ச்சனா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை அர்பிர் சிங். 

வரவிருக்கும் போட்டி:

தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் விஜேந்தர் தான் தற்போதைய உலக குத்து சண்டை அமைப்பின் ஆசிய பசுபிக் சூப்பர் மிடில் வெயிட் சாம்பியன் மற்றும்  உலக சூப்பர்  மிடில் வெயிட் சாம்பியன். வரும் மார்ச் 31ம் தேதி நடைபெற இருக்கும் தனது 11வது போட்டியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார் விஜேந்தர் சிங்.

இவரின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். ஒரு மனிதனின் வெற்றிக்கு தேவை பணமோ, பதவியோ அல்ல... பயிற்சி (முயற்சி) கடுமையான பயிற்சி இருந்தால் வெற்றி நம் பக்கம்.      

விஜேந்தரரின் வாழ்க்கை பயணத்தை வீடியோ வடிவில் காண 


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.