நான் தான் ஒசத்தினு நெனச்சா இப்படி தான்

  Sujatha   | Last Modified : 26 Feb, 2018 06:35 am


எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை முழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை "ஷூட்"  செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். எலி பிடிப்பவனும் தன்  துப்பாக்கி’யுடன்  வந்துவிட்டான்.  அதை ஷூட் செய்ய.  எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன. ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல்  ஒதுங்கி தனித்தே  நின்றிருந்தது. எலி  பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது.. சரியாக குறி பார்த்து அந்த எலியை சுட்டான். எலி spot அவுட்  வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான். 

ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்.. ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்.. என்ன காரணம்? என்றான். அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான். இப்படித்தான்... "அனேகர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு  மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்" அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. என்றான். 

ஆம் நண்பர்களே! நம்மில் பலர் அந்த சிறிய எலி போன்று தான் இருக்கிறார்கள். பணமும் பதவியும் மட்டுமே வாழ்க்கை என்று உறவுகளையும், நண்பர்களையும் அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள். ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும்  கூட நமது துக்கத்தை பகிர்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. எனவே நமது கோவங்களையும், இறுமாப்பையும் தவிர்த்து உறவுகளை வளர்ப்போம். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.