உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

  Sujatha   | Last Modified : 15 Mar, 2018 08:09 am


நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது, அதன்மீது நடவடிக்கை எடுத்தல், சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

இத்தினம் அனைத்துலக நுகர்வோர் அமைப்பின் சார்பில் அனுசரிக்கப்படும் தினமாகும். 1962ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜான் கென்னடி உலக நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவ்வேளையில் சர்வதேச நுகர்வோருக்கான அடிப்படை உரிமைகளைப் பெற இந்த மசோதா வழிவகுத்தது. இதனை குறிப்பிடும் வகையில் இத்தினம் 1983ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

யார் நுகர்வோர்: நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை பயன்படுத்துபவர். வாடிக்கையாளர் என்பவர், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி, அதை பயன்படுத்தாமல் மற்றொருவருக்கு கொடுப்பவர். உதாரணமாக, தந்தை குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார். இதில் தந்தை வாடிக்கையாளர். அதை சாப்பிடும் (பயன்படுத்தும்) குழந்தை நுகர்வோர். வணிகத்தில் எத்தனையோ விதமான வியாபாரம் நடக்கிறது. இவை நுகர்வோருக்கு சரியான விலையில், சரியான தரத்தில் கிடைக்கிறதா என்பது சந்தேகமே. உரிமைகள் என்ன என்பதே தெரியாமல் வியாபாரிகளிடம் நுகர்வோர் ஏமாறுகின்றனர். பணம் மட்டுமே குறிக்கோளாக வியாபாரிகளும் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. 

நுகர்வோர் எதிர்த்து போராடினால் தான், தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வை, தங்களது பகுதியில் குறைந்தது ஒருவருக்காவது ஏற்படுத்த வேண்டும் என இந்நாளில் உறுதி ஏற்போம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.