400 ஆண்டுகளாக மழையே பெய்யாத அட்டகாமா பாலைவனம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 17 Mar, 2018 10:07 am


தென் அமெரிக்காவில் உள்ள சிலியில் இருக்கும் மிகப்பெரிய பாலைவனம் அட்டகாமா. மற்ற பாலைவனங்கள் போல் இல்லாமல் இது சற்று வித்தியாசமானது. 

அந்தீஸ் மலைக்கு மேற்குப் பகுதியில், தென் அமெரிக்காவின் இரு பிரதான நாடுகளான பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கிடையே, பசிபிக் கடற்கரையோரம் சுமார் 1,000 கிலோமீட்டர் நீளமும் சுமார் ஒரு லட்சத்து 28 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பும் கொண்டு விரிந்து பரந்திருக்கிறது இது.


பாலைவனம் என்றாலே மண் குவியல்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்த பாலைவனத்தில், மணலை விடவும் உப்புப் படுகைகளும், எரிமலை குழம்புப் படிமங்களும் அதிகமாக காணப்படுன்றன. இடையிடையே உப்பு ஓடைகளும், மணலும் அந்தீஸிலிருந்து குமுறும் எரிமலையிலிருந்து சீறிப் பாய்ந்து காய்ந்து போயிருக்கும் எரிகற்குழம்புப் படிமங்களும் நிறைந்திருக்கின்றன.

எப்போதும் காய்ந்து போயிருக்கும் இந்தப் பாலைவனத்தில் 2011-ஆம் ஆண்டு ஒரு பெரும் பனிமழை பெய்தது. இதனால் சுமார் 31 அங்குல அளவுக்கு பனிக்கட்டிகள் இந்தப் பாலைவனத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. 


2015ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி, இந்தப் பாலைவனத்தின் தென்பகுதியில் பெய்த கன மழையால் சேறும் சகதியும் கலந்த மழை நீரால், சிலி, கோப்பியாகோ, டியெர்ரா அமாரில்லா எனப் பல நாடுகளும் பாதிக்கப்பட்டன. இதில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். ஆனால், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 1570-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரையிலான சுமார் நானூறு வருடங்களாக இந்தப் பகுதியில் மழையே பெய்யவில்லை என்பது ஆச்சரியமான உண்மைதான்!

உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என அட்டகாமா பாலைவனம் என நாசா மற்றும் தேசிய புவியியல் கழகம் ஆகிய அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close