உலக தண்ணீர் தினம்

  Sujatha   | Last Modified : 22 Mar, 2018 07:14 am


'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கு ஏற்ப நீரின்றி நம்மால் வாழ இயலாது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால் இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் மாறவில்லை.  எனவே உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் தண்ணீரை மாசுப்படுத்தாமல் உயிர் போல் காப்போம் என்ற உறுதி மொழியை ஏற்போம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close