மார்டன் மீரா என்று போற்றப்பட்ட மஹாதேவி வர்மா பற்றிய அறியா தகவல்கள்

  Sujatha   | Last Modified : 26 Mar, 2018 07:51 am


இந்தி இலக்கியத்தில் முக்கியமானவரும் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவருமான மஹாதேவி வர்மா 1907ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் பிறந்தார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பள்ளிப் படிப்பு, ஜபல்பூரில் இளங்கலைப் படிப்பு, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  

திருமணமானவர் என்றாலும் துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். புத்த மதத்தில் மிகுந்த பற்று கொண்டவர். பெண் கல்வி மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட அலகாபாத் மகிளா வித்யா பீடத்தின் முதல் தலைமை ஆசிரியராகவும் பிறகு இதன் வேந்தராகவும் பணியாற்றினார்.

இவரது படைப்புகளில் சொந்த அனுபவங்களை உள்ளடக்கிய ஸ்ம்ருதி கீ ரேகாயே (smriti ki rekhaye) அதீத் கே சல்சித்ர (ateet ke chalchitra ) ஆகிய நினைவுச் சித்திரங்கள் மிகவும் பிரபலமானவை.

அடிமை இந்தியாவில் நிலவிய துன்பங்களைக் கண்டு வேதனை அடைந்து அவற்றை தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார். சமூகப் பிரச்சனைகள், பெண்களின் வாழ்க்கைத் தரம் குறித்த சிந்தனைகளை shrinkhala ki kariyan  என்ற தொகுப்பில் எழுதியுள்ளார்.

மகாத்மா காந்தியின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளால் கவரப்பட்டு சமூக சேவையிலும் ஈடுபட்டார். சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண், ஞானபீட விருது மட்டுமின்றி இலக்கியத்துக்காக வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் பெற்றுள்ளார்.

மார்டன் மீரா என்று போற்றப்பட்ட மஹாதேவி வர்மா தனது 80வது வயதில் (1987) மறைந்தார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.