யார் இந்த ரெனே டெஸ்கார்ட்ஸ் ? அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு!

  Suja   | Last Modified : 31 Mar, 2018 08:34 am

 

ரெனே டெஸ்கார்ட்ஸ் இந்த பெயரை எங்கோ எப்போதோ கேள்விப்பட்டது போல் அல்லது படித்தது போல் இருக்கிறதா? ஆம் நிச்சயமாக நம் வாழ்க்கையில் அவரை கடந்து தான் வந்து இருக்கிறோம்.  நம் பள்ளி பருவத்தில், கணிதத்தில் பயன்படுத்தும்  x அச்சு மற்றும்  y அச்சு கொண்ட வரைபடத்தாளை உருவாக்கியவர் தான் இந்த  ரெனே டெஸ்கார்ட்ஸ். அவரது பிறந்த நாளான இன்று அவரை பற்றி அறிந்து கொள்ள சில துளிகள்: 

# மெய்யியல் அறிஞர், கணிதமேதை, தத்துவ மேதை ரெனே டெஸ்கார்ட்ஸ் (Rene Descartes) 1596ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

# 1607ஆம் ஆண்டு இவர் லா-பிலெஞ்சிலுள்ள ஜேசூயிட் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு கணிதம், இயற்பியல் மற்றும் கலிலியோவின் கண்டுபிடிப்பு வேலைகள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது.

# 1614ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பின் 1615 முதல் 1616 வரை பொய்ட்டீர் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் இளங்கலை பட்டமும் பொதுச்சட்டவியல் தொழில் செய்ய உரிமமும் பெற்றார். அதனையடுத்து தனது தந்தையின் விருப்பப்படி வழக்கறிஞரானார்.

# ஆனால் இவர் கணிதம், இயற்பியல், மெய்யியல், மருத்துவம், அரசியல் போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். பின்பு 1626-ல் ரூல்ஸ் ஃபார் த டைரக்ஷன் ஆஃப் தி மைண்ட் என்ற நூலை எழுதினார். ஒளியியல், வானியல், கணிதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

# கணிதத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளான கார்ட்டீசியன் ஆய்வுமுறை (Cartesian Coordinate System) பகுப்பாய்வு வடிவியலை (Analytic Geometry ) கண்டறிந்தார்.

# மனிதனின் சிந்திக்கும் திறன் குறித்து தீவிரமாக ஆராய்ந்து, ‘நான் சிந்திக்கிறேன். அதனால் நான் இருக்கிறேன் (I think, therefore I am)’ என்ற தத்துவத்தை வெளிப்படுத்தினார். அது இவரது உலகப்புகழ் பெற்ற தத்துவமாகும்.

# உண்மையை அறிய ஏற்கெனவே நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளில் இருந்து தொடங்கக்கூடாது. சந்தேகத்தில் இருந்து தொடங்க வேண்டும்’ என்பார். 1641-ல் இவர் எழுதிய மெடிடேஷன்ஸ் ஆன் ஃபர்ஸ்ட் ஃபிலாசஃபி என்ற நூல் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளது.

# நவீன தத்துவவியலின் தந்தை என்று புகழப்பட்ட ரெனே டெஸ்கார்ட்ஸ் தனது 53வது வயதில் (1650) மறைந்தார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close