இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் ஷேக்ஸ்பியர் பற்றி அறியா தகவல்கள்!!

  Sujatha   | Last Modified : 23 Apr, 2018 10:48 am


பொதுவாகவே நமது ஃபிரண்ட்ஸ் யாராவது பிழை இல்லாமல் இங்கிலிஷ் பேசினால், பெரிய ஷேக்ஸ்பியர்னு நினைப்பு ஓவரா பீட்டர் விடுறானே(ளே)னு கிண்டல் பண்ணுவோம். ஏன்னா? நாம ஸ்கூல் பிள்ளைங்களா இருந்த காலத்துல இருந்து இந்த காலம் வரை(ஏன் அடுத்த தலைமுறைல கூட இருக்கலாம்) இங்கிலிஷ் புக்ஸ்ல ஷேக்ஸ்பியர் பேர் இல்லாத பக்கத்தை நாம கடந்து வந்து இருக்க மாட்டோம்.  அவ்வளவு பிரபலமான இந்த அறிஞரின் கதைகளையும், கவிதைகளையும் படிச்ச நாம அவர் இறந்த நாளான இன்று அவரை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாமா? 

0 ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் அறியப்படும் ஷேக்ஸ்பியர் 1564ம் ஆண்டு பிறந்தார்.(வரது உண்மையான பிறந்த தேதி அறியப்பட முடியவில்லை. ஆனால் மரபுவழியாக 23, ஏப்ரல், செயின்ட் ஜார்ஜ் தினத்தன்று கொண்டாடப்படுகிறது.) 

0 இவரது தந்தை வெற்றிகரமான கையுறை உற்பத்தியாளராகவும் அரசியல்மன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த ஜான் ஷேக்ஸ்பியர். தாய் செல்வமிகுந்த நில அதிபரின் மகளான மேரி ஆர்டன்.  

0 ஷேக்ஸ்பியர் தனது 18 வயதில், 26 வயதான ஆனி ஹேதாவே திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு 3 குழந்தைகள். திருமணம் முடிந்த ஆறு மாதங்களில், அவர் சுசானா எனும் பெண் குழந்தை பிறந்தது. சுமார் இரண்டு வருடங்கள் கழித்து இரட்டைக் குழந்தைகளாக மகன் ஹேம்னெட்டும் மகள் ஜூடித்தும் பிறந்தனர். ஹேம்னெட் உடல்நல பாதிப்பால் 11 வயதில் இறந்து போனான்.

0 1585 மற்றும் 1592 ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தை ஷேக்ஸ்பியரின்  "தொலைந்த காலம்" என்று அறிஞர்கள் குறிப்பிடப்படுகின்றனர். 

0 1592-ல் லண்டனில் அவரது மேடை நாடக வாழ்க்கை தொடங்கியது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘லார்டு சாம்பர்லெய்ன்’ஸ் மென்’ எனும் நாடகக் குழுவின் நடிகராகவும் உரிமையாளர்களில் ஒருவராகவும் உயர்ந்திருந்தார் ஷேக்ஸ்பியர். அவரது திறமையால் கவரப்பட்ட முதலாம் ஜேம்ஸ் மன்னர் நாடகக் குழுவுக்கு முழு ஆதரவும் தந்தார். பின்னர் ‘தி கிங்ஸ் மென்’ என்று அந்தக் குழுவின் பெயர் மாற்றப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், லண்டன் மேடை நாடக உலகில் ஷேக்ஸ்பியர் புகழ்பெற்றிருந்தார்.

0 1595-ல் ‘எ மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம்’ மற்றும் ‘ரோமியோ ஜூலியட்’ போன்ற புகழ்பெற்ற நாடகங் களை எழுதினார். 1596-ல் ‘தி மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்’ நாடகத்தை எழுதினார்.

0 1599-ல் ‘ஜூலியஸ் சீஸர்’ நாடகத்தை எழுதினார். 1599-க்கும் 1602-க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகப் புகழ்பெற்ற ‘ஹாம்லெட்’ நாடகத்தை எழுதினார். அவரது நாடகங்களில் மிக நீண்ட நாடகம் இது. தனது தந்தையான டென்மார்க் மன்னரை விஷம் வைத்துக் கொன்ற தனது மாமா கிளாடியஸைப் பழிவாங்கும் இளவரசன் ஹாம்லெட்டின் கதை அது. துன்பியல் நாடகங்களுக்குப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் எழுதிய இந்நாடகம் உலகின் மிகச் சிறந்த துன்பியல் நாடகங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றது. அதன் பின்னர், ‘மெக்பெத்’, ‘ஒத்தெல்லோ’, ‘தி டெம்பெஸ்ட்’ போன்ற நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதினார்.

0 ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் பிரதான பாத்திரங்கள் பொறாமை, வஞ்சகம் என்று சகல தீய குணங்களையும் கொண்டவர்கள். அவரது இந்த ‘விதிமீறல்’ விமர்சகர்களின் கண்டனங்களைச் சம்பாதித்தாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

0 உலகத்தின் மகாகவிகளுள் ஒருவரான ஷேக்ஸ்பியர் ஐம்பத்துமூன்று ஆண்டுகள் வாழ்ந்து 1616 ஏப்ரல் 23-ல் மறைந்தார். 

0 இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்று அழைக்கப்படும் ஷேக்ஸ்பியர் படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் இன்றும் வாழ்ந்து வருகின்றன. அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது என்பதே இவரின் சிறப்பு.

0 உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் இன்றளவும் இவரின் நாடகங்களின் தாக்கம் இருப்பதை நம்மால் காண முடியும்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close