பார்பி டால் பர்த்டே இன்று! செல்ல பார்பியின் வரலாறு

  Shalini Chandra Sekar   | Last Modified : 09 Mar, 2018 04:49 pm


சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பொம்மை உலகில் புகழின் உச்சத்தில் இருப்பது பார்பி பொம்மை. அப்பேற்பட்ட பார்பி பொம்மை அமெரிக்காவின் பொம்மை கண்காட்சியில் இடம்பெற்ற தினம் இன்று.

ரூத் ஹேண்டிலர் என்ற பெண்மணிதான் இந்த பார்பி டாலை உருவாக்கியவர். சிறுவயது குழந்தைகளின் விருப்பங்களை தன் மகள் மூலமாகக் கேட்டறிந்து இந்த பொம்மையை தான் உருவாக்கியதாகக் கூறி இருந்தார் ரூத். இது பத்தி கொஞ்சம் டீடெய்லா தெரிஞ்சுக்குவோமா?

இதோ உங்க செல்ல பார்பியின் வரலாறு:

ரூத் ஹேண்ட்லர் தன்னோட மகள் காகித பொம்மைகளுடன் அடிக்கடி விளையாடுவதைக் கவனிச்சாங்க. அதுக்கு அவள் பெரியவர்களோட பாத்திரங்களைக் கொடுத்து சந்தோஷப் படுறதையும் பாத்தாங்க. அந்தச் சமயத்தில குழந்தைகளுக்கான பொம்மைகள் எல்லாம் அநேகமாக சின்னஞ்சிறு குழந்தை வடிவங்கள் மாதிரியே இருந்துச்சு. பொம்மைகளுக்கான சந்தையில ஒரு இடைவெளி இருக்கக்கூடும் என்பதை உணர்ந்த ஹேண்ட்லர், நல்லா வளர்ந்த,  ஒரு உடம்ப மையமா வச்சு ஒரு பொம்மை செய்யற யோசனையை அவங்களோட கணவர் எலியட்டிடம் சொன்னாங்க. 

இத்தனைக்கும் அவர்தான் மேட்டல் பொம்மை நிறுவனத்தோட இணை நிறுவனர். அவர் அந்த யோசனையில அவ்ளோவா உற்சாகம் காட்டல. மேட்டலின் மற்ற இயக்குநர்களும் அப்படித்தான் இருந்தாங்க.

அதே சமயம் 1956 - வது வருடம் தன்னோட குழந்தைகள் பார்பரா மற்றும் கென்னத் ஆகியோருடன் ஐரோப்பாவிற்கு ஒரு சுற்றுலா சென்ற ரூத் ஹேண்ட்லர், பில்ட் லில்லி-ங்கற ஒரு ஜெர்மன் பொம்மையைப் பார்த்தாங்க. வளர்ந்த மனித உருவத்துல இருந்த அந்த பொம்மைதான் ஹேண்ட்லரின் மனசுல இருந்த வடிவம். அந்த பொம்மைகள்ல மூணை வாங்கினாங்க ரூத். தன் மகளிடம் ஒண்ணைக் கொடுத்துட்டு, மத்தத மேட்டலுக்கு கொண்டுப்போனாங்க.. சித்திரப் புத்தகம் ஒண்ணுல வர்ற பிரபலமான கதாபாத்திரத்தை ஒட்டி லில்லி பொம்மை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது டை பில்ட் ஜியுடுங்-ங்கற செய்தித்தாளுக்காக ரெய்ன்ஹார்ட் ப்யூடின் என்பவர் வரைஞ்சதாம். லில்லி வேலைக்குப் போற ஒரு பெண். தனக்கு என்ன வேணும்ங்கறது அவளுக்கு தெரியும். அதை அடைவதற்கு அவள் ஆண்களையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. 1955ம் ஆண்டு முதன் முதலாக ஜெர்மனியில் லில்லி பொம்மை விற்பனையானது. முதல்ல பெரியவங்களுக்காக அது விற்கப்பட்டாலும், பிறகு குழந்தைகளிடம் பிரபலமாகிவிட்டது. அவங்க அதுக்குன்னே தனியாக கிடைக்குற ஆடைகளை அணிவித்து மகிழ்ந்தாங்க.

ஐக்கிய அமெரிக்காவுக்குத் திரும்ப வந்ததும், (ஜேக் ரையான் என்ற டெக்னிஷியன் உதவியுடன்) ஹேண்ட்லர் அந்தப் பொம்மையை திரும்பவும் டிஸைன் பண்ணி, அதுக்கு பார்பிங்கற ஒரு புது பேரை வச்சாங்க.. இந்தப் பேர் அவங்க மகள் பார்பராவின் பேர்லருந்து வந்துச்சாம். 

1959வது வருஷம் இதே மார்ச் - 9ம் தேதி நியூயார்க் நகர்ல, 'அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி'யில இந்தப் பொம்மை முதன் முதலா வெளியாச்சு. 

இந்தத் தேதி தான் பார்பியின் அதிகாரப் பூர்வமான பிறந்த நாள்..


முதன் முதலாக வந்த பார்பி பொம்மை கருப்பும், வெள்ளையும் கலந்த ஒரு வரிக்குதிரை மாதிரியும், நீச்சல் உடையோட, அப்புறம் அதோட பிரத்யேக அடையாளமான உச்சந்தலையில முடியப்பட்ட ஒரு போனி டெயில், இப்படித்தான் இருந்துச்சு. 

"பதின் வயது நவ நாகரிக மாடல்" ங்கற பேர்ல இந்த பொம்மை சந்தைக்கு வந்துச்சு. இதோட  உடைகளை மேட்டலின் நாகரிக உடை வடிவமைப்பாளர் சார்லட் ஜான்சன் டிஸைன் பண்ணிருந்தாரு.. 

ஆரம்பத்துல வந்த பார்பி பொம்மைகள் ஜப்பான் நாட்ல தயாராச்சு. அதோட உடைகள் ஜப்பான் நாட்டு வீட்டுத் தொழிலாளர்களால கையால தைக்கப்பட்டிருந்துச்சு. உற்பத்தி தொடங்கிய முதல் வருஷம் 350,000 பார்பி பொம்மைகள் விற்பனையானது.


இதுக்கிடையிலே பார்பி ஒரு பருவப் பெண்ணின் உருவம் பெற்றிருப்பது அவசியம் என்று ரூத் ஹேண்ட்லர் நம்பினாங்க. ஆரம்ப கட்டங்கள்ல சந்தை ஆராய்ச்சி செஞ்சப்போ, இந்தப் பொம்மையின் வெளிப்படையான மார்பகங்களை சில பெற்றோர்கள் விரும்பலைன்னு தெரிய வந்துச்சு. அதனாலே பார்பியின் தோற்றம் பல முறை மாத்தப்பட்டிருக்கு.. 

இதுல முக்கியமானது 1971ம் ஆண்டு பொம்மையின் கண்கள், ஆரம்பத்துல பக்க வாட்டில் பார்த்து அடக்கமா இருந்ததைப் போல இல்லாம, நேருக்கு நேராகப் பார்க்குற வகையில மாத்தப்பட்டதுதான்.

மேலும் மிகப் பெரும் அளவில் தொலைக் காட்சி விளம்பரம் செய்றது மூலம் விற்பனை உத்திகளை வகுத்துக் கொண்ட பொம்மைகள்ல பார்பி தான் ஃபர்ஸ்ட். இதை பெருமளவுல மத்த பொம்மைகளும் பின்பற்றத் தொடங்கிட்டாங்க. உலகெங்கும் 150 நாடுகள்ல ஒரு பில்லியனுக்கும் மேலான பார்பி பொம்மைகள் விற்குதாம். இதுல ஒவ்வொரு விநாடியும் மூன்று பார்பி பொம்மைகள் விற்பனையாகுதாம்.

ஆனா இப்போதைய நவீன காலத்துல செல்போன்களும், டேப்லட், கம்ப்யூட்டர்ன்னு வந்துட்டதால, பார்பி டாலின் தாக்கம் குறைஞ்சுப் போச்சு. ஆனாலும் பார்பி பர்த் டே- யை மறக்க முடியுமா?

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close