"தி ஃப்யூரி" நாயகனை பற்றி அறிய 6 குறிப்புகள்

  Sujatha   | Last Modified : 15 Mar, 2018 07:56 am


உலகப் புகழ்பெற்ற ஜெர்மனி எழுத்தாளரும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான பால் ஹெயிஸ் (Paul Heyse) பிறந்த தினம் இன்று (மார்ச் 15). அவரைப் பற்றிய அரிய 6 தகவல்கள்:

* ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு அருகே உள்ள ஹெலிகெய்ஸ்ட் என்ற இடத்தில் யூதக் குடும்பத்தில் (1830) பிறந்தார். தந்தை புகழ்பெற்ற மொழியியலாளர், பெர்லின் பல்கலைக்கழக பேராசிரியர். தாத்தாவும் மிகப் பெரிய அறிஞர்.

* இவர் பிரபல இலக்கியவாதிகளை சந்தித்த பிறகு இவரது முதல் கவிதை 1848-ல் வெளியானது. சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய இவரது முதல் நூலை இவரது தந்தை வெளியிட்டார்.

* 1867-ம் ஆண்டு தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளில் ஏராளமாக எழுதிக் குவித்தார். இவரது புகழ் மெல்ல மெல்லப் பரவி உலகம் முழுவதும் பிரபலமானார். ஏராளமான கவிதைகள் 120 நாவல்கள், 177 சிறுகதைகள், 60 நாடகங்களை எழுதியுள்ளார்.

* "தி ஃப்யூரி" சிறுகதை இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இவர் எழுத்தாளர்கள் அனைவரையும் இணைத்து "டை குரோகடைல்" என்ற இலக்கிய அமைப்பை தொடங்கினார்.

* இலக்கியத்தின் பல்வேறு களங்களிலும் முத்திரை பதித்த இவருக்கு 1910-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* சிறந்த இலக்கியவாதியும், ஜெர்மனியின் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பால் ஹெயிஸ் தனது 84-வது வயதில் (1914) மறைந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close